பெரியார் அறிக்கை இதோ:
நான் மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டீஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்தவிதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும் கூட,
அவைகளுக்குப் பயன்பட்டு என் லட்சியத்தையோ, திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் 3 ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்து விடமாட்டீர்கள்.சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங்காதீர்கள்.
ஆகவே இப்படிப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்.
(ஈ.வெ.ரா.
விடுதலை 8-.11.1957)
நீதிமன்றத்தில் என்ன அறிக்கை கொடுப்பது? அதுகூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதே _ இதோ அந்த அறிக்கை:
26ஆம் தேதி கிளர்ச்சியில்
நீதிமன்றத்தில் கூறவேண்டியது
மேன்மை தங்கிய . . . . . . . . . . கோர்ட்டார் அவர்கள் சமூகத்திற்கு
வாதி: (போலீசார்)
எதிரி:
வழக்கு எண்: / 57
சமூகம் கோர்ட்டில் எதிரி வாசித்துக் கொடுக்கும் ஸ்டேட்மெண்ட்:
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும் அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தை, திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
இடம்:
தேதி:
எதிரியின் கையெழுத்து
(விடுதலை 26-.11.-1957)
இப்படி ஒரு இயக்கம் உண்டா?
கர்ப்பிணிப் பெண்கள்கூட ஜாதி ஒழிப்புக்காகச் சிறைக் கோட்டம் ஏகினரே! சிறையில் பிறந்த குழந்தைக்குச் சிறைப் பறவை என்று கூட பெயர் சூட்டப் பட்டதே!
சிறுமிகளும் தண்டனையிலிருந்து தப்பவில்லையே! நீடாமங்கலம் பிரபசர் கே.ஆர்.குமார் அவர்களின் மகள் செல்விக்கு இரண்டாண்டு தண்டனை. சென்னையில் உள்ள மைனர் பெண்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனரே!
கலியபெருமாள், கோவிந்தசாமி ஆகிய இரு சிறுவர்களும்
தண்டனை பெற்று நெல்லை மற்றும் செங்கற்பட்டு சிறுவர் சிறைகளுக்கு அனுப்பப்பட்டார்களே!
நியூயார்க் டைம்ஸ் செய்தி
சென்னை ராஜ்ஜியத்தின் பழைய பரம்பரையைச் சேர்ந்த 2000-க்கு மேற்பட்ட திராவிடர்கள் இந்திய குடிஅரசின் அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக