பணக்காரத் தன்மையையும், வைதீகத்தையும் ஆளத்தெரியாத அரசாங்கத்தையும், கடவுளையும் கண்டித்தே வந்திருக்கிறார், இந்த 25 ஆண்டுகள் ஓய்வு ஒளிவுமின்றி.
மாபெரும் காரியங்களை எல்லாம் சாதித்து வந்து இருக்கும் அய்யா அவர்களைப் பற்றிப் பேசும்போது கொஞ்சம் நிதானமாகத்தான் பேச வேண்டும். இஷ்டம் போல சொல்லும் போது யாரையும் வானளாவப் புகழ்ந்து கூறலாம். ஆனால், பெரியார் அவர்கள் செய்த பெரும் சாதனைகள் மக்கள் கண்முன் நின்று கொண்டிருக்கும் போது அப்படிப் புகழ்ந்து கூற நிதானம் மிகவும் தேவைதான். ஏனென்றால், அரசியல் தெளிவோடு ஆராய்ந்து பார்க்கும்போது பெரியார் அவர்கள் 25 ஆண்டுகளாக விடாமல் ஒரு பெரும் கூட்டத்தாருக்குத் தலைவராகவே இருந்து வருகிறார் என்பது தெரியும். மற்ற தலைவர்களில் பெரும்பாலோர் கட்சியின் தலைவராக இருந்துதான் வந்திருப்பார்கள். ஆனால், அய்யா அவர்கள் மாத்திரம் இயற்கையாய் வெகுநாள்களாக மக்களுடைய தலைவராகவே இருந்து வருகிறார்கள். என்றைய தினமும் அய்யாவை மக்கள் பிரிந்தது கிடையாது. தமிழ் மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் பெரியார் அவர்களின் நினைப்பு வேரூன்றித்தான் இருக்கும். இருபது ஆயிரம் பேர்கள் கூட்டத்திலே பேசியும் இருக்கலாம். லட்சம் பேர் கூட்டத்திலேயும் பேசி இருக்கலாம். இருநூறு பேர் கூட்டத்திலேயும் பேசி இருக்கலாம். ஆனால், மக்களின் மனதிலே வேறுபாடின்றி எப்போதுமே மக்களின் தலைவராகவே விளங்கி வந்திருக்கிறார். வாழ்க்கையின் போக்கிலே ஏற்றத்தாழ்வு இருக்கலாம். ஆனால், கொள்கையிலே ஏற்றத்தாழ்வு காண முடியாது.
இப்படிப்பட்ட ஒரு கட்சி உலக சரித்திரத்திலே இந்தியாவிலே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அதிலே உழைத்து வந்திருக்கிறார்.
லெனின் சொல்லுகிறார். மக்களுடைய இதயத் துடிப்பை நேர்மையாகத் தேடிப் பிடித்து எவன் தெரிந்து கொள்ளுகிறானோ அவன் உண்மையான கம்யூனிஸ்டாக முடியுமென்று கூறுகிறார். அதைப் போல பெரியார் அவர்களும் மக்களின் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்த்து, யாரை முன்னுக்குக் கொண்டு போகவேண்டுமோ அந்த சமூகத்தினரை முன்னுக்குக் கொண்டுவரப் பாடுபடவேண்டுமென் கிறார். ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் நம் நாட்டிற்கு மட்டுமல்ல. இந்திய நாட்டிற்கே ஒரு பெரும் மக்கள் தலைவர் எனக் கூறவேண்டும்.
(பெரம்பூர் - செம்பியம் பொதுக் கூட்டத்தில் 23-_11-_1951 அன்று தோழர் ஜீவானந்தம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.)
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக