அக்கிரகாரத்தை
அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள் ``ஏண்டா பரதா! எக்காரணம்
பற்றி, எந்த
ஆதாரத்தின்மீது நீ பூதேவரை
நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படுமோசக்காரர்
என்று பதட்டம் பேசுகிறாய், பலப்பல
கூறி ஏசுகிறாய், பாபமூட்டையைச்
சுமக்கிறாய், பாவி, நீ
ரவுரவாதி நரகத்தில் உழலுவாய், போ, என்று சபிப்பர். அவர்களுக்குக்
கூறுகிறேன், தூற்றவல்ல, நான் தொகுத்திட்ட இப்பா. பன்னெடு
நாட்களுக்கு முன்பு, படம்
பிடித்தார் ஓர் பரங்கி. அதனை
நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை, எடுத்துக்கட்டிக்
கூறுவதுமல்ல, மீண்டுமோர் முறை, இப்போதே
போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா? சரி, இதோ
பாருங்கள். சில
ஆங்கிலச் சொற்கள்!!!
Avarice, Ambition,
Gunning, Wily, Doubletongued, Servile,
Insinuating, In-Justice, Fraud, Dishonest, Oppression Intrigue.
Insinuating, In-Justice, Fraud, Dishonest, Oppression Intrigue.
இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை, அகராதியின்
உதவிகொண்டு பாருங்கள். பிறகு, நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா
தவறா? என்பது
பற்றி யோசியுங்கள்.
தோழர்களே, இத்தகைய பதங்களால், ஆரியரை
அர்ச்சித்திருக்கிறார். ஆபி டுயூபா எனும் அறிஞர் இன்றல்ல, நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத
நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார
உரைத்தார் 1807-இல்.
``Hindu
Manners Customs and ceremonies” என்ற
நூல் Abbe
J.A. Dubois என்பவரால்,
1807-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலே, பார்ப்பனரை அவர்
இவ்வண்ணம் அர்ச்சித்திருக்கிறார்! ஆரிய இன இயல்பை, மிகத் தெளிவாகத் தீட்டியிருக்கிறார். இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர்; `சாமி என்று சாற்றுகின்றனர். என்னே அவர்தம் நிலை!
ஆபி
டியூபா, பிரெஞ்சுப்
பாதிரி. இங்கு 136 ஆண்டுகளுக்கு முன்னர், தாம்
கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்புபற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன். `அவர் தீட்டியுள்ளது தவறானது; காமாலைக்
கருத்துடையவர் அவர் என்று யாரும் கூறிடவும் முடியாது. ஈடில்லாத ``இந்து பத்திரிகை, ஆபி
டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அதுமட்டுமா? அன்று
அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் ``இந்து எழுதிற்று.
ஆரியரில்
யாரோ ஒரு அயோக்கியனை, என்றோ
ஒரு நாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப், பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக
அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது
முறையா? அழகா? என்று கேட்பர் சிலர்! முறையாகாது
என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல
என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர்
ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்த
ஆள் எந்த இனத்தவரோ, அந்த
இனத்தையே அக்குற்றச் சாட்டுக்கு உள்ளாக்குவது, மடமைதான்.
ஆனால், ஆபி டியூபா, முப்பது
ஆண்டுகள் இங்கு, உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின்
அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய
இனத்தின் இயல்பினை, உள்ளது
உள்ளவாறு கண்டபிறகே, ஏட்டில்
எழுதினார்.
சரி, ஆபி டியூபா, பிரெஞ்சுப்
பாதிரி; அவர்
பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார், அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக் கூடாதோ? என்று
சாகச சித்தர்கள் கேட்பர். ஆபி
டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியவர்
எச்.கே. பீன்சாம்ப் என்னும் ஆங்கிலர்தாம். ஆனால், அதனை
மேற்பார்வை செய்தவரே, சி.வி. முனுசாமி அய்யர் எனும் பூசுரரே! தவறு
இருப்பின், அவரா
சும்மா இருப்பார்? ஆகவே
ஆபி டியூபா, ஆரியரை
நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது
உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை
கிடக்கட்டும் அன்பர்களே! அவர்
தீட்டியுள்ள வாசகக் கருத்துக்கள் சிலவற்றினைக் கேளீர்!
``பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வாருவருக்கும் இயல்பு; எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!
இது
ஆபி டியூபாவின் வாசகம். இன்றும்
இதிலே முழு உண்மை இருத்தலை உலகு நன்கு அறியும். மாயாவேதம்
பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும்தானே நடக்கிறது! வேதாந்தமும், விரக்தியும், விருந்தும் வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி டியூபா, அன்றே
கூறினார்.
தந்திரம், நயவஞ்சகம், இரட்டை
நாக்கு பல்லிளித்து நிற்பது முதலியன, அவர்களிடம்
இயற்கையாகவே இருக்கின்றன.
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக