தமிழ்நாட்டின் கோவில்களைப் பார்த்த காந்தியார் என்ன சொன்னார்?
கானாடுகாத்தானுக்கு காந்தியார் சென்றார் (22.-9.-1927). அங்கிருந்த கோயில்களைப் பார்த்த காந்தியாருக்கு மனவருத்தம் ஏற்பட்டது.
ஆலயங்களை
நிர்மாணிப்பதில் நீங்கள் தாராளமாகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்று அறிகிறேன். ஆலயம் என்று
ஒரு கட்டடத்தைக் கட்டி விட்டதால் மட்டும் கடவுள் அங்கு இருக்கிறார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. தாசிவீட்டில் எந்த அளவு இறைவன் இருப்பாரோ அந்த அளவு அவர் இருக்கும் ஆலயங்கள் பலவற்றை நான் அறிவேன் என்று சொன்னாரே! (தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 533).
காந்தியார் ஒரு முறை காசி விசுவநாதன் கோவிலுக்குச் சென்றார். அங்கு என்ன நடந்தது? இதோ காந்தியாரே கூறுகிறார்:
நான் கண்டவை எனக்கு மன வேதனையைத் தந்தன. நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு அதிகமாயிருந்தது. குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோவிலுக்குப் போகவேண்டியிருந்தது.
அங்கு அமைதி என்பதே இல்லை.
ஈக்கள் ஏகமாக மொய்த்தன.
கடைக்காரர்களும், யாத்ரீகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது.
நான் கோவிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது
ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கடவுளைக் காணவேண்டும் என்று தேடினேன். ஆனால் நான் காணவில்லை.
ஆகையால் எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலுங் கூடமாகவே இருந்தது. தட்சணை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால் ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அந்தத் தம்படியை
வீசி எறிந்து விட்டார்.
இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத் தான் கொண்டு போகும் என்று கூறி என்னை சபித்தார். பண்டாவிடம் காந்தியார் கூறுகிறார்.
மகாராஜ்! என் விதி எப்படியாயினும் சரி, ஆனால் இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது.
விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லா விட்டால் அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள் என்றேன்.
பண்டாவுக்குக் கொடுத்தது ஒரு தம்படி. அவரைக் கூப்பிடுவதோ மகாராஜ்!
பண்டா கூறுகிறான்:
போய்த் தொலை.
உன் தம்படி எனக்கு வேண்டாம் என்று கூறி தொடர்ந்து வசைமாரி பொழிந்தார்.
தரையில் கிடந்த தம்படியை எடுத்துக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன்.
பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன்.
ஆனால் மகராஜ் அந்தத் தம்படியை விட்டுவிடக் கூடியவர் அல்லர். என்னைத் திரும்பக் கூப்பிட்டார்.
அது சரி,
அந்தத் தம்படியை இங்கே கொடுத்து விட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக்கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்கு கெடுதல் ஆகிவிடும் என்றார்.
நான் ஒன்றும் சொல்லாமல் அந்தத் தம்படியைக் கொடுத்துவிட்டேன். அப்புறம் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டேன்.
காந்தியார் சுயசரிதை.
லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமல் இருக்கும்போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆதலால் நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு, மாசற்ற வாழ்வு வாழ வேண்டும். ஆத்மார்த்தீகமான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்க வேண்டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இந்து இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலையும் அணிந்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்கு சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண்டாமை, உயர்வு, தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம், யாவும் ஒழிந்தபிறகுதான் இந்துவுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க் கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை. (சுயசரிதம் - பக்கம் 480)
உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் -பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.
மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர்,- பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு ராமசாமி தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன் றவர்களே இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள்.
(தமிழ்நாட்டில் காந்தி -பக்கம் 520--_521)
நான் சென்னைக்கு வந்தபோது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன்.
(தமிழ்நாட்டில் காந்தி -பக்கம் 520--_521)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக