தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மொழி பற்றிய “விவாதங்
களையும்” “கிளர்ச்சிகளையும்” பார்த்தால் தமிழர்களுக்கு மொழி விஷயத்தில் ஒரு
பொறுப்பான குறிக்கோள் இல்லை என்றுதான் தெரிகிறது.
மொழிபற்றி
கட்சிக்கொரு குறிக்கோள்
1. பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக நாட்டு மொழி, அரசியல்
மொழி - இந்தியாக இருக்க வேண்டும்; சிறப்பு
மொழி சம°கிருதமாக இருக்க
வேண்டும் என்கிற லட்சியத்தில் இருக்கிறார்கள்.
சற்று ஏறக்குறைய எல்லா பார்ப்பனப் பிள்ளைகளும்
இந்தி படித்து வருகிறார்கள்.
2. பார்ப்பனக் கட்சியாகிய சுதந்தரா (ராஜாஜி) கட்சி வடநாட்டில்
இந்தி தேசிய மொழியாக மாத்திரமல்லாமல்,
அது அரசியல் மொழியாக ஆகவேண்டுமென்றும்,
தமிழ் நாட்டில் “இந்தி இருக்கலாம்; ஆனால்
அது அரசியல் மொழியாக இருக்கக்கூடாது;
இங்கிலீஷ்தான் அரசியல் மொழியாக இருக்கவேண்டும்”
என்றும் கூறுகிறது.
3. தி.மு.கட்சி,
“இந்தி கூடாது; அரசியல் தமிழில்
நடத்தப்படவேண்டும்” என்று “கிளர்ச்சி” செய்கிறது.
4. கிராமணியார் (தமிழரசு) கட்சி, “அரசியலில் இங்கிலீஷ்
கூடாது; இங்கிலீஷ் மூலம் பாடங்கள் கூடாது;
பள்ளிகளில் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் பயிற்சி கூடாது; காலேஜுகளில்
இங்கிலீஷில் பாடபோதனை நடத்தப்படுவதும் கூடாது; தமிழிலேயேதான் நடத்தப்பட
வேண்டும்” என்றும், அதற்காகவே தாம் சிறைசெல்லப் போவதாகவும்
மற்றும், மந்திரிக்குக் கறுப்புக்கொடி பிடிக்கப்போவதாகவும் சொல்கிறது.
இவைகளைப்
பார்த்தபின் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,
இன்றைய அரசியல் கட்சிக்காரர்கள் பெரிதும்
தங்கள் கிளர்ச்சிக்கும், தாங்கள் இருப்பதாகக் காட்டிக்
கொள்வதற்கும், இந்தி மொழிப் பிரச்சினையையே
கருவியாக வைத்துக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கிறது.
வெளிநாட்டினர்
எள்ளி நகையாடுவாரே!
வெளிநாட்டிலிருந்து
நம் நாட்டுக்கு வந்த அறிவாளி இந்நாட்டின்
இப்படிப்பட்ட கிளர்ச்சிகளையும்; கறுப்புக்கொடி கூப்பாடுகளையும் பார்க்கிற ஒருவன் - நம்மைப் பற்றி என்ன
சொல்வான்?
“1946-இல்
கூடவா - உலக ஒற்றுமைக்கான சமாதானங்கள்
ஏற்பட்ட பிறகு கூடவா இப்பப்பட்ட
பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள்” என்று கருதமாட்டார்களா?
நாம் அரசியலில் எவ்வளவுதான் சுதந்திரம் பெற்று விட்டாலும் அறிவில்,
உலக வளர்ச்சித் தன்மையில் மேம்பாடு அடையாவிட்டால், பெற்ற சுதந்திரம் எதற்குப்
பயன்படும்? ஏதாவது ஒரு காரணம்
சொல்லி, ஜெயிலுக்குப் போகவும், அதற்குப் பண்டமாற்றாகப் பதவி (கூலி) பெறவும்தானே
பயன்படும்? இந்த நிலை குறிப்பிட்ட
தனி மனிதனுக்குப் பயன்படலாமே ஒழிய, மக்களுக்கு, நாட்டுக்கு
- இதனால் என்ன பயன் ஏற்படமுடியும்?
தமிழில்
என்ன நல்ல கருத்து உள்ளது?
நாட்டுக்குச்
“சுதந்திரம்” கிடைத்து இன்றைக்கு 20-ஆவது ஆண்டு நடக்கிறது.
20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த
நிலை, “இங்கிலீஷ் வேண்டாம்” “தமிழ் வேண்டும்” இதுதானா?
அய்யோ பைத்தியமே! தமிழை (பிற மொழிகளி
லிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ்
மூல நூல்களை, தனித்தமிழ் இலக்கிய நூல்களில் எதை
எடுத்துக் கொண்டாலும் அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு,
அணி என்பதான இலக்கணப்படி அமைந்த
தமிழ் “சுவை” அல்லாமல் அறிவு
பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான
ஏதாவது ஒரு சாதனத்தை, சிறு
கருத்தை பூதக்கண்ணாடி வைத்துத் தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்துப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்று தமிழ் அபிமானிகளை
வணக்கத்தோடு கேட்கிறேன்..
சிலப்பதிகாரம்
இது விபசாரத்தில் ஆரம்பித்து, “பத்தினி”த் தனத்தில்
வளர்ந்து, முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்.
கம்பராமாயணம்
கம்பராமாயணக்
கதையை எடுத்துக் கொண்டால், வெறும் பொய்க் களஞ்சியம்
அது. அதன் கற்பனையை எடுத்துக்
கொண்டால், சிற்றின்பசாகரம் அதாவது, இது ஒரு
மாதிரி காமத்துப்பால் என்றுதான் சொல்லலாம். நடப்பை எடுத்துக் கொண்டால்,
காட்டுமிராண்டித் தனத்தின் உருவம்.
இவற்றின்
இன்றைய அனுபவத்திற்கு, அறிவு உலகப் போருக்கு,
வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியவை என்பதாக என்ன காணமுடிகிறது?
வைத்திய
நூல்கள்: இவற்றை எடுத்துக் கொண்டால்
வைத்தியன் பிழைக்கத்தான் அதில் வழி இருக்கிறதே
தவிர இன்றைய நிலையில் நோயாளி
பிழைக்க, நோயைக் கண்டு பிடிக்க
அதில் என்ன அதிசயம் இருக்கிறது?
வான நூல்களை எடுத்துக்கொண்டால், மதசம்பந்தமான,
புராண சம்பந்தமான புளுகுகள், ஆபாசங்கள் அவையும் 100-க்கு 90 வடவன் கொண்டுவந்து,
“ஜோசியன்” பிழைக்கப் புகுத்தினதுடன், காரியத்திற்கு, அனுபவத்திற்குப் பயன்படாத குப்பைக் கூளங்களைத் தவிர, தெரிந்துகொள்ள வேண்டிய,
வளர்ச்சிக்குப் பயன்படக்கூடிய சரக்கு அதில் என்ன
இருக்கிறது?
தொழில்
துறையில் - விஞ்ஞான முறையை எடுத்துக்
கொண்டால், தமிழில் இதற்கு ஏதாவது
பயன்படக்கூடிய சாதனங்கள் இருக்கின்றதா? என்றால், உலக்கை, உரல், ஆட்டுக்கல்,
குழவி, மரச்செக்கு, மாடு சுற்றுதல், தோல்பறி
ஏற்றம், மாடுகள் முன்பின்-கவாத்து,
கைத்தறி, கைராட்டை, பிரிமனை, வண்டி மாடு, தேர்
- ரதம், எழுத்தாணி - பனை ஓலை, சக்கிமுக்கிக்
கல், குயவன் செய்யும் அகல்
விளக்கு, எண்ணெய்த் திரி, கொம்பு, தப்பட்டை,
ஊதுகுழல், மத்தளம் இவைதானே?
விஞ்ஞான
நூல்களை எடுத்துக்கொண்டால், ஜபம், தபம், மந்திரம்,
தபோமகிமை ‘ஞானதிருட்டி’ தெய்விக சக்தி போன்ற
காட்டுமிராண்டித்தனங்களைவிட
காரியசித்திக்கு, அனுபவத் திற்கு ஏற்ற
சாதனம் அதில் - தனித்தமிழ் (பூர்வீக
- இக்கால) நூல்களில் - எதில் என்ன இருக்கிறது?
சோறு, கஞ்சி, களி, புட்டு,
மாவு, கிண்ணி, வட்டில் மற்றும்
இதுபோன்ற மூலையில் எடுத்தெறியக் கூடிய சாதனங்களும், சொற்களும்,
பண்டங்களும்தான் தமிழில் அதிலும் “சங்ககாலத்
தமிழில்” காணக்கூடியதும் தெரிந்து கொள்ளக்கூடியதுமாய் இருக்கின்றனவே தவிர, வேறு இன்றைக்குப்
பயன்படக்கூடியது, கண்டு பிடிக்கப்பட்டது என்ன
இருக்கிறது? என்று கேட்கிறேன்.
பார்ப்பான்
புளுகுகள் இன்றேல் தமிழ்ப் புலவனுக்குப்
பிழைப்பு ஏது?
பார்ப்பான்
புளுகுக் கதைகள், அரசியல் பொருளாதார,
சிங்கார, வானநூல் புளுகுகள் இல்லாவிட்டால்
இன்றைய எப்படிப்பட்ட தமிழ்ப் புலவனுக்கும் பிழைக்க
வழி ஏது? பார்ப்பான் சரக்கு
இல்லாவிட்டால் தமிழ்ப் புலவர்கள் பட்டினி
கிடக்க வேண்டியதுதானே?
தமிழனுக்குக்
காலம் கிடையாது; ஒன்று பார்ப்பானு டையது.
அல்லது ஆங்கிலேயனுயைதுதான் பயன்படுகிறது.
கலவியையோ,
காமத்தையோ, சிருங்காரத்தையோ, சிற்றின்பத்தையோ, “பேரின்பத்தையோ”, நன்மை தீமை காலங்களையோ,
நேரங்களையோ எடுத்துக்கொண்டால் அவைகளின் காரியங்களுக்கு தமிழனுக்கு இன்று அமலில், அனுபவத்தில்
புழங்க சொற்களைக் காண்பதே பகலில் நட்சத்திரம்
காண்பது போலத்தானே இருக்கிறது?
இன்னும்
இது போன்ற தமிழ், தமிழ்
மொழியின் தன்மையை எடுத்துச் சொல்ல
மிக வெட்கப்பட வேண்டியி ருக்கிறது. பார்ப்பான் சிரிப்பானே என்று பயப்பட வேண்டி
யிருக்கிறது.
நிற்க,
நம் எதிர்கால வாழ்வுக்கு இன்று நாம் எதை
எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
வெளிநாட்டான்
அறிவு இனிப்பு; மொழி கசப்பா?
சர்வத்தையும்
விஞ்ஞானமயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி சர்வத்திலும்
மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப்
பின்பற்றி வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம்
போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர்
முத்தமிழ் சங்கத் தமிழ்களையே நம்பி
என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ இங்கிலீஷ் சொல்லோ,
ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷைப் பகிஷ்கரித்து விட்டு, என்ன சாதித்துக்
கொள்ள முடியும்?
பலரும்
அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்?
சாதாரணமாக
பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில் கார், லாரி,
ப°, சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக
மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான
மொழி பேசும் மக்களும் இந்தப்
பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பொதுவாக
நான் சொல்வேன், இன்று நாம் வாழும்
தமிழ்நாடு நம் பழமை - பழங்காலத்
தமிழ்நாடு அல்ல. அதாவது, ஆங்கிலேயனோ,
துருக்கனோ வருவதற்கு முன்பு இருந்த மூவேந்தர்
காலத் தமிழ் நாடல்ல. நம்
வேறு நாட்டுக்கு குடியேறாவிட்டாலும் வேறு நாட்டு நாகரிகம்,
கலாச்சாரம், செயல்முறை, வாழ்க்கை முறை, தொழில் முறை
நம் நாட்டில் புகுந்து நம்மை ஆட்கொண்டு விட்டது.
இதனால்தான் நான் இன்று முழங்காலுக்குக்
கீழ் மறையும்படி வேட்டி கட்டவும், “கிராமணியார்கள்”
தெருவில் நடக்கவும் நாங்கள் இருவரும் இவ்வளவு
பேசவும் தெரியவும் முடிந்தது.
தாய்மொழித்
தத்துவமே பொய்
தாம் (இன்னது) மொழி என்பதற்கும்;
பிறவி (இன்னது) ஜாதி என்பதற்கும்
பிறவி மதம் (இன்ன மதம்)
என்பதற்கும் என்ன குறிப்பு (மெய்
ஆதாரம்) காண முடிகிறது? இவை
எப்படி வந்து நம்மைப் பற்றியதோ
அப்படித்தான் தாய் மொழியும், மதமும்
நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறது?
“பழையன
கழிதலும் புதியன புகுதலும்
வழுவலவே
(கூடாதது அல்லவே)”
கால வகையினாலே என்றால் இயற்கை அமைப்பினாலே
என்பதுதானே தத்துவப் பொருளாகும்?
உண்மையாய்
நம்மைப் பெற்ற தாய், தகப்பன்
பெயரே நாம் வேறு ஒருவருக்குத்
தத்துப் போனவுடனே மாறிவிடுகிறதா இல்லையா? நாமும் தத்து எடுத்த
தாய், தகப்பன் பெயராகச் சொல்கிறோமா
இல்லையா? அது மாத்திரமல்ல; திதி
செய்தாலும் தத்து தாய்-தகப்பன்மார்
ஏற்றுக்கொள்கிறார்கள். ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும்
அந்தக் “திதியின் பயன் அவர்களைச் சேர்ந்து
விடுகிறது” செய்யாவிட்டால் “பாபம் வந்து சேருகிறது”
என்று கூறுவதில்லை!
“கருப்பாயி”
வயிற்றில் பிறந்த பையனானாலும், அது
“வெள்ளைக்காரனுக்கு”ப் பிறந்தால் அல்லது
வெள்ளையன் எடுத்து வளர்த்தாலும் அவனுக்கு
இங்கிலீஷ்தானே தாய் மொழியாகும்? இந்தியாவில்
சினை ஆகி இங்கிலாந்தில் பிள்ளை
பெற்று, அந்தப் பிள்ளை அங்கு
அந்நாட்டு குடிமகனாகப் பதிந்து கெண்டால் அவனுக்கு
இங்கிலாந்து தானே தாய்நாடு? அந்தக்
குழந்தையை ஃபிரெஞ்சுக்காரன் கொண்டு போய் வளர்த்தால்
அக்குழந்தைக்கு ஃபிரெஞ்சு தானே தாய்மொழி?
இந்து மதக்காரன் தாய் தகப்பனுக்குச் சினையாகி,
ஆ°பத் திரியில்
பெற்று, அங்கேயே அக்குழந்தையை விட்டுவிட்டு
தாய், தகப்பன்மார் போய்விடுவார்களேயானால் அதை ஒரு முகம்
மதிய நர்சு எடுத்துப் போய்
வளர்த்தால் அது இ°லாம்
மதமாகிவிடுகிறது. கிறி°துவ நர்சு
எடுத்துப் போய் வளர்த்தால் அக்குழந்தை
கிறி°துவ மதமாகிவிடுகிறது.
ஜாதி, மத, மொழி உணர்ச்சி
செயற்கையே
இப்படியாக
ஜாதி உணர்ச்சி, மொழி உணர்ச்சி; மத
உணர்ச்சி சூழ்நிலைக்கேற்ப ஏற்படுகிறது. இதற்காக ஒருவர், நான்
உயிர் விடுவேன், சிறைசெல்வேன், கறுப்புக்கொடி பிடிப்பேன் என்றால், அது எப்படி ஜாதி,
மத, மொழிக்காக இருக்க முடியும்? பிழைப்புக்காக
இருக்கலாம்; பிழைக்க வேறு வழி
இருந்தால், வேறு பதவிக்கு ஆக,
வியாபாரத்திற்கு ஆக, விளம்பரத்திற்கு ஆக
இருக்கலாம் என்பது எனது தாழ்மையான
கருத்து.
ஏனென்றால்,
ஜாதி, மதம், மொழி ஆகியவைகள்
ஒரு மனிதனுக்கு இயற்கையானவை அல்ல; இவை செயற்கை
யானவை; காலதேச வர்த்தமானத்தினால் ஒரு
மனிதனை வந்து அடைபவை; அல்லது
மனிதனின் வசதிக்குத் தக்கபடி ஏற்படத்தக்கவை.
உணவுப்
பழக்கம் போலும், கணவனுக்கு மனைவியும்,
மனை விக்கு கணவனும் ஏன்?
காதலிக்குக் காதலனும், காதலனுக்குக் காதலியும் அமைவது நற்சம்பவமாய் அமைபவை.
மற்றும் எஜமானனுக்கு அடிமையும்,
அடிமைக்கு எஜமானனும் அமைவதுபோல் அமைபவையே அல்லாமல் எது நிரந்தரம்? எது
மாற்றக்கூடாதது? எது மாற்றமுடியாதது?
விளக்கம்
நீண்டுவிட்டது என்று கருதுகிறேன். மொழி
பக்தர்களுக்கு (வெறியர்களுக்கு) ஒரு விண்ணப்பம்: பக்தியின்
பெயரால், அறிவு வளர்ச்சியை - நாட்டு
வளர்ச்சியை - புதுமை வளர்ச்சியைப் பாழ்
அடித்துவிடாதீர்! உடை விஷயத்தில் நாம்
காட்டுமிராண்டிகளானதே போதுமானது.
நூல் : அறிவு விருந்து
ஆசிரியர் : - தந்தை
பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக