பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு
என்பதாகும். பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
- குடிஅரசு, தலையங்கம் - 25.03.1944
மதத்தின் பேரால் இப்பார்ப்பனர்கள் நம்மிடமிருந்து வாங்கும் வரிப்பணத்துக்கு ஏதாவது ஒழுங்குண்டா? அவன் கர்ப்பத்தில் தரிக்கும் முன்பே, கர்ப்பதான முகூர்த்தம் என்பதாகவும், கர்ப்பம் தரிக்கும் காலம் சீமந்த முகூர்த்தம் என்பதாகவும், பிறந்து விட்டால் ஜாதகரணம், நாமகரணம், தொட்டிலில் போடுதல், பாலூட்டுதல், ஆயுசு ஓமம், முடி வாங்குதல், காது குத்துதல், பள்ளியில் வைத்தல், காயலா முதலியவைகளுக்குச் சாந்தி, பிறகு அவனுக்குக் கலியாணமென்றால் பெண் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நாள் வைத்தல், விவாகம் ஆனபின் மேற்படி "சடங்கு, அவன் பிள்ளைகுட்டி பெற்றால் அதற்கும்; அவன் காயலாவுக்கு கிரகதோம், சாந்தி, கோவில், குளம், யாத்திரை ஆகியவைகள் இவ்வளவும் தவிர, கடைசிக் காலத்தில் இன்ன வருடம், இன்னமாதம், இன்னதினம், இன்ன திதியில் செத்துப் போனார். வை பணம், அரிசி, பருப்பு, உப்பு, புளி வகையறா சாமான்கள் என்று கேட்பதோடு, சாப்பிட்டு அஜீரணம் ஏற்பட்டால் அதற்கும் இஞ்சியும், சுக்கும் வை என்றும் கேட்டு வாங்கி, இவ்வளவும் கொடுத்தும் நீயும் உன் பெண்ஜாதியும் என் காலில் விழுந்து கும்பிட்டு, கால் கழுவின தண்ணீரைக் குடியுங்கள்' என்றும் சொல்லி, மூட்டைக் கட்டிக்கொண்டு போய்விடுகிறான்.
- குடிஅரசு, சொற்பொழிவு, 03.04.1927
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக