இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்துவரும் (என்னால் தோற்றுவிக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதிக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராளமான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல்வவான்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள். இதுதான் துவேப் பிரச்சாரத்தால், ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகின்றார்கள்.
எனக்கு, எனது சுயமரியாதை திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான்கூட ""மேல் ஜாதி'' யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது,அவன் நல்வாழ்வு வாழக் கூடாது,அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்லி ராஜா, சர். சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான். பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல. அந்த முறை தொல்லையானது. சாந்தியற்றது என்று சொல்லலாம், என்றாலும் அதுபணக்காரனுக்கும் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும் இயற்கையில் மாறக் கூடியதும் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.
ஆனால், இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும் மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.
- குடிஅரசு 09.11.1946
--------------
திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான்கூட ""மேல் ஜாதி'' யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் கோடீஸ்வரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.
- குடிஅரசு 09.11.1946
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக