வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கட்டாய இந்தி



இந்தி எதிர்ப்பு என்பது - ஏதோ ஒரு மொழியை எதிர்க்கும், வெறுக்கும் உணர்வல்ல; அது ஓர் இனப் பண்பாட்டு ஆதிக்கத்தை அடியோடு வெட்டித் தூக்கி எறியும் வரலாறு மேற்கொண்ட போராட்டமாகும்.

1938 ஏப்ரல் 21ஆம் தேதிக்கு (இன்று) ஒரு முக்கிய குறிப்பு உண்டு. இந்நாளில்தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலத்தில் பிரதமராக இருந்தபோது கட்டாய இந்தியை அதிகாரப் பூர்வமாக அறிவித்த நாள்.

இந்தி எதிர்ப்பு என்கிறபோது சில நாள்கள் மறக்கப்பட முடியாதவை.

இந்தியைத் திணிக்கப் போவதாக ராஜாஜி முதலில் அறிவித்த நாள் 10.8.1937 இந்தி கூடவே கூடாது என்று சென்னை மாநிலத் தமிழர் மாநாடு திருச்சியில் கூடி அறிவித்த நாள் 26.12.1937, காஞ்சியில் மாநாடு கூட்டி மீண்டும் அவ்வாறே அறிவித்த நாள் 27.2.1938 திருச்சிப் பாசறையில் இந்திப் போர் மந்திராலோசனைக் கூட்டம் கூட்டப்பட்ட நாள் 28.5.1938.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடக்க நாள் 3.6.1938; திருச்சியிலிருந்து தமிழர்ப் பெரும் படை புறப்பட்ட நாள் 1.8.1938. தமிழ்நாடு தமிழருக்கே என்று தந்தை பெரியார் முதன்முதலில் முழக்கம் கொடுத்த நாள் 11.9.1938; அண்ணா சிறை கண்ட நாள் 26.9.1938, தமிழ் நாட்டுப் பெண்கள் முதன் முதலில் சிறை புகுந்த நாள் 14.11.1938

போராட்டத்தின் முழு முதற் தலைவர் தந்தை பெரியார் சிறைக் கோட்டம் ஏகிய நாள் 5.12.1938; சிறையில் முதற்பலி (மாவீரன் நடராசன்) 15.1.1939 தாளமுத்து என்னும் வீரன் இன்னுயிர் ஈந்தநாள் 12.3.1939, கட்டாய இந்தி ஒழிக்கப்பட்ட நாள் 21.2.1940.

(ஆதாரம்: ம.இளஞ்செழியன் தீட்டிய தமிழன் தொடுத்த போர்)

இந்தியை ஏன் திணித்தார் ஆச்சாரியார்? ஆச்சாரியாரே கூறிய பதிலை தந்தை பெரியார் எடுத்துக் காட்டியுள்ளார்.

திரு ஆச்சாரியார் பலமுறை (லயோலா கல்லூரியில் ஒருமுறை) பேசும்போது சமஸ்கிருதத்தின் அலங்கார அணிகளை நீக்கிப் பார்த்தால் அதுதான் இந்தி, இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும், எவ்வித வேறுபாடும் கிடையாது (நூல்: தந்தை பெரியார் எழுதிய ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்) என்று ஆச்சாரியார் கூறியதை சிந்தித்துப் பார்த்தால் இந்தி எதிர்ப்பை ஏன் முன்னிறுத்தினார் ஈரோட்டு ஏந்தல் என்பதற்கான காரணம் பளிங்கு போல் விளங்கும்.

பார்ப்பன எதிர்ப்பு - இந்தி எதிர்ப்பு - இதிகாச புராணங்கள் எதிர்ப்பு - இந்துத்துவா எதிர்ப்பு என்பன எல்லாம் ஒரு பொருள் பன்மொழிகளே!


ஆனாலும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முற்றிலும் அழித்த நாளே திராவி டர்களின் உண்மையான விடுதலை நாள்.

 21.4.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...