வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கவனம்!



நரியை நனையாமல் குளிப்பாட்டுவது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அதனைத் துண்டு இல்லாமல் துவட்டுபவர்களைப் பார்த்ததில்லை.

அ.தி.மு.க.வைப்பற்றி குறை கூறுவது போல பார்ப்பன ஏடுகள் செய்தி போடும்போதுகூட, மறைமுகமாக அ.தி.மு.க.வினர் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை அதில் தாண்டவமாடச் செய்து விடுவார்கள்.

இன்றைய தினமலர் ஏட்டைப் படித்தால் அதன் தாத்பர்யம் புரியும். ஸ்ரீரங்கத்தில் சுலபமானதா ஜெயலலிதா வெற்றி? என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது

தினமலர் (3-4-2011 பக்கம் 2).

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உட்பட 23 வேட்பாளர்கள் களமிறங்குவதால், அத்தொகுதி ஓட்டுச் சாவடிகளில் இரண்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த அமைப்புகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகளுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு, கிராமப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதி ஓட்டுகள் பிரிப்பு ஆகியவை ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

ஜனதா கட்சி வேட்பாளருக்காக சுப்பிரமணியசாமி பிரச்சாரம் செய்கிறார். அகில பாரத இந்து மகாசபை வேட்பாளர் ரவிசங்கர் அய்யர், தமிழ் மாநில சிவசேனா வேட்பாளர் செல்வம் ஆகியோர் சுயேச்சை சின்னத்தில் களமிறங்குகின்றனர்.

இதுதவிர சுயேச்சைகளாக போட்டியிடுபவர்கள் பலர் இந்து மதம் சார்ந்த அமைப்புகளில் தொடர்புடையவர்கள். இதனால், இவ்வமைப்புகளைச் சார்ந்தவர்களின் ஓட்டுகள் கணிசமாகப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல கிராமங்களில் பெரும்பான்மையாக முத்தரையர் சமூகத்தினர் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் கிராமப் பகுதி ஓட்டுகள் கணிசமாக அவருக்குச் செல்ல வாய்ப் புள்ளது.

உடையார் சமூக ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நிற்கிறார்.

இவற்றையெல்லாம் எதிர் கொண்டு ஜெயலலிதா அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் அ.தி.மு.க.வினர் களத்தில் இன்னமும் வேகம் காட்டாமல் இருப்பது பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்று கடைசியாக மங்களம் பாடி முடிக்கிறது தினமலர்.

சூட்சமம் புரிகிறதா? ஜெயலலிதாவுக்கு என்னென்ன இடர்ப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டி, அவற்றையெல்லாம் அ.தி.மு.க. சரி செய்ய வேண்டும் என்று கோடிட்டுக் காட்டுவதுதான், தூண்டுவதுதான் தின மலர் பூணூல் ஏட்டின் அக்கறையும், பாசமும் ஆகும்.

அடடே, என்ன தளுக்கு - அந்தரங்கத் துடிப்பு- இந்த அக்கிரகாரக் கூட்டத்துக்கு!

குறிப்பு: தினமலர் கோடிட்டுக் காட்டியதைப் புரிந்து கொண்டு தி.மு.க. அணியினர் சுதாரிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.



3.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக