திங்கள், 17 ஜூலை, 2017

கமல்


கலைஞானி  என்று போற்றப்படும் பகுத்தறிவாளர் நடிகர் கமலகாசன் அவர்களின் திரையுலக வாழ்க்கை 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதற்காகப் பாராட்டு விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. விழாவில் கேரள மாநில முதலமைச்சர் உள்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

ஆனால், கேரள மாநிலத் தைச் சேர்ந்த முக்கிய கலை உலகப் பிரமுகர்கள் இவ் விழாவைப் புறக்கணித்துள்ள னர். இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடிகருக்குக் கேரளாவில் பாராட்டு ஏன் என்ற எண்ணம் அம்மாநிலத் தில் நிலவுகிறது.

முதலமைச்சர்அச்சு

தானந்தன் கூட இதுபற்றி விழாவில் குறிப்பிட்டு, இந்த நிலை விரும்பத்தக்கதல்ல என்று கூறியுள்ளார். இந்த விழாவில் கருத்து வேறுபாடு இருப்பது குறித்தும்கூட கமலகாசன் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

என்னதான் தேசியம் பேசினாலும், சர்வதேசியம் பேசினாலும் தனது மண், தனது நாடு, தனது இனம், தனது மொழி, தனது பண்பாடு என்கின்ற உணர்ச்சி மேலோங்கி நிற்கத்தான் செய்கிறது.

அதிலும் கேரளத்தவர் களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! ஒருமுறை அகில இந்திய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் போட்டியிட்ட இருவர் வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றி பெற்ற நிலையில், தனது வெற்றியை கேரள மாநிலப் பங்கில் (கோட்டாவில்) சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அவர்கள் இருவரும் கேரளக்காரர்கள்.

போட்டியில் பங்கு கொள் ளும்போது தமிழ்நாட்டின் சார்பாக வெற்றி பெற்றதும் அதன் சிறப்பு கேரளாவுக்குப் போகவேண்டும் என்று நினைக்கும் அந்த மனப் பான்மையைக் கவனிக்க வேண்டும்.
மத்திய அரசு சோப்புக்கு வரி போட்டபோது, கேரள மாநில முதலமைச்சர் .கே. நயினார் மத்திய அரசைக் கண்டித்து என்ன சொன்னார் தெரியுமா?

மலையாளிகள் நாள் தோறும் இரண்டு தடவைகள் குளிக்கிறார்கள்; தமிழ்நாட்டுக் காரர்களோ வாரத்துக்கு இரண்டு தடவைதான் குளிக் கிறார்கள். எனவே, சோப்பு வரி உயர்வு மலையாளிகளைத் தான் பாதிக்கும் என்றாரே பார்க்கலாம்.

மார்க்சியவாதிகளாக இருந்தாலும், பொதுவாக மனித குலத்தையும் தாண்டித் தன் மாநிலம், தனது இன மக்கள் என்பதில் எப்பொழுதுமே குறியாகத்தான் இருப் பார்கள்.

முல்லை பெரியாறு அணைக்கட்டுப் பிரச்சினை யில், சட்டம் நீதிமன்ற ஆணை - நியாயம் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வேலி தாண்டும் வெள்ளாடுகளாக பெரிய பதவிகளில் உள்ளவர்கள்கூட இருப்பதையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலப்படாமல் போகாது.


27.8.2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...