நான்கு வேதங்களில் எதுவும் எனக்கு தெரியாது என்று சபரிமலை முன்னாள் பூசாரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உலக பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் பிரதான பூசாரியாக (மேல்சாந்தி) இருந்தவர் கண்டரரு மோகனரு. இந்த கோயிலில் இவரது குடும்பத்தினர்தான் பரம்பரைபரம்பரையாக பூசாரிகளாக இருந்து வந்துள்ளனர்.
அய்யப்பன் கோயிலில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. 10 வயது பூர்த்தியாகாத மற்றும் 50 வயதை கடந்த பெண்களுக்கும் அனுமதியுண்டு. ஆனால் நடுத்தர வயதுடைய கன்னட நடிகை ஜெயமாலா அய்யப்பன் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயமாலா, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும் இதில் கண்டரரு மோகனருக்கு தொடர்பு உண்டு என்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவர்மீது பாலியல் தொடர்பான குற்றங்களும் உள்ளன.
திருக்கோயில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த திருவாங்கூர் தேவ°தானம் ஒரு கமிஷனை நியமித்துள்ளது. இந்த கமிஷனின் தலைவர் கே.எ°. பரிபூரணன் ஆவார். கமிஷன் முன் ஆஜரான கண்டரரு மோகனருவிடம் துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் என்ற சதுர்மறையும் கற்று தேர்ந்தவர்கள்தான் கோயில் வழிபாட்டில் உயர் பொறுப்புக்கு வரமுடியும். விசாரணை கமிஷனரிடம் எனக்கு எந்த வேதமும் தெரியாது என்று மோகனரு தெரிவித்தார்.
அவர் பலமுறை கணபதி ஹோமம் நடத்தியுள்ளார். விநாயகரின் ஜென்ம நட்சத்திரம் எது என்ற விசாரணை கமிஷன் கேட்டதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. விநாயகரின் ஜென்ம நட்சத்திரம் சதுர்த்தி என்பதுகூட தெரியாமலேயே கணபதி ஹோமம் நடத்தியுள்ளீர்களா என்று கேட்டதற்கும் அவரால் மவுனத்தையே பதிலாக தரமுடிந்தது.
உங்களுக்கு சம°கிருதம் தெரியுமா என்று விசாரணை கமிஷன் கேட்டதற்கு தெரியாது என்று மோகனரு பதிலளித்தார். ஒரு பூசாரி கட்டாயம் அறிந்திருக்கவேண்டிய அடிப்படை விஷயங்கள்கூட தெரியாதவராக மோகனரு இருந்துள்ளார் என்பதை இந்த விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. இது கேரள ஆன்மீக வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
(மாலை முரசு, 28.06.2007)
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக