அரசியலில் முதிர்ச்சி கண்டவர் என்றும் ஆள்வதில் அசகாயசூரர் என்றும் அக்ரகாரம் மடியில் தூக்கி வைத்துத் தாலாட்டிக் கொஞ்சுகிறதே _ ஒரு யுத்தக் காலத்தில் எதைப் பேச வேண்டும் _ எதைக் கேட்க வேண்டும் என்கிற அடிப்படை ஞானமின்றி நடந்து கொண்டதற்கு என்ன பதில்?
1971 சனவரி 23இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், ராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டது என்று கூறி,
பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனரே! அந்தத் தேர்தலில் இதனை சாக்காகக் கொண்டு (அத்தேர்தலில் தி.மு.க.
_ காங்கிரஸ் கூட்டு; ராஜாஜி _ காமராசர் கூட்டு) பார்ப்பன ஊடகங்களின் உச்சக்கட்டப் பிரச்சாரமும் செய்து திமுகவைத் தோற்கடிக்க நிர்வாணமாக நின்றனரே!
1967 தேர்தலில் 138 இடங்களைப் பெற்ற தி.மு.க.,
ராமன் செருப்படிப் பிரச்சாரத் தேர்தலில் (1971இல்)
183 இடங்களைக் கம்பீரமாகப் பெற்று வெற்றி உலா வந்ததே _ நினைவில் இருக்கிறதா? ஆச்சாரியாரின்
புலம்பல்!
தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக்கிறது, மதம் சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும் அனுக் கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரி சபை.
தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்று பாடி வைத்ததை நினைவு கொண்டு தர்மம் நிச்சயமாக வெல்லத் தான் போகிறது என்று உறுதி பெறுவோம். நம்முடைய பண்டைய பாவங்களுக்காக இன்று கூலி தருகிறோம் என்ற உணர்வுடன் இறைவனை உளம் நெகிழ்ந்து பிரார்த்தித்து அவரவர் கடமையைச் செய்து வந்தால் இறைவன் நிச்சயம் செவிசாய்ப்பான். தமிழகத்தின் பொல்லாத சாபத் தீட்டு நீங்கி இங்கு தெய்வீகம் மீண்டும் பொலியும். இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்துவிட்டது இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறி விட வேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர் புனிதத் தமிழ் மண்ணுக்கு இந்த இழுக்கும் அழுக்கும் நீங்கும் வண்ணம் நாம் அனைவரும் உறுதியான பக்தி செலுத்தி இறைவன் உள்ளத்தை உருக்கி அவனருள் பெற்று, இந்த நாட்டைத் தர்ம பூமியாக்க வேண்டும்.
ஸ்ரீராம நவமி வருகிறது. சத்திய, தர்மமூர்த்தியாக வந்த பரமனே ஸ்ரீராமன், அந்த ராமனை முன் வைத்தே _ அந்த ராமனை உள்ளத்தில் உறைவித்தே _ காந்தியடிகள் சுதந்திரம் பெற்றுத் தந்தார். ராமராஜ்யமாக சுயராஜ்ய இந்தியா திகழ வேண்டும் என்பதே மகாத்மாவின் கனவாக இருந்தது. அந்தக் கனவு பகற்கனவாகி விடக்கூடாது நூற்றுக்கு நூறு மெய்யாக வேண்டும். அந்த அளவுக்கு நாம் உண்மை ஆஸ்திகர்களாவதற்குத் தர்மமூர்த்தியான ராமனைச் சரண்புக வேண்டும். இந்த ராமநவமியன்று இந்த திவ்ய விரதத்தைத் தொடங்குவோம். (கல்கி 4.4.1971)
உடம்பெல்லாம் மூளை என்று உலகுக்கெல்லாம் பார்ப்பனர்களும் அவர்தம் ஊடகங்களும் பறைசாற்றும் குல்லூகப்பட்டர் ஆச்சாரியார்_தந்தை பெரியார் முன் சரணடைந்தார்_தோல்வியை ஒப்புக் கொண்டார் என்பதைப் பார்ப்பனர்கள் மரியாதையாக இந்த அறிக்கையின் மூலம் ஒப்புக் கொள்வார்களா?
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக