உலகம் முழுவதும் ஏப்ரல் முதல் தேதியை முட்டாள் தினம் என்று சொல்லுகிறார்கள். இந்த நாளில் ஒருவர் இன்னொ ருவரை ஏமாற்றுவது
உடனே ஏப்ரல் முட்டாள் (April
Fool)
என்று அழைப்பது என்பது ஒரு வகை யான பொழுதுபோக்கு!
ஏதோ ஏப்ரல் முதல் தேதி மட்டும்தானா மனிதன் முட்டாளாக இருக்கிறான்? மனிதனை முட்டாளாக ஆக்குவதற்குத் தானே கடவுளும், மதமும், சாத்திரச் சம்பிரதாயங்களும் நயவஞ்சகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
களிமண் என்று தெரிந்திருந்தும், சாணி என்று தெளிவாக அறிந்திருந்தும் அதனைக் கடவுள் என்று கும்பிட வைத்துவிட்டானே, இவனும் கரணம் தப்பினால் மரணம் என்று நாள்தோறும் தட்சணை கொடுத்து, தோப்புக் கரணமும் போடுகின்றானே, மாட்டு மூத்திரத்தை தட் சணை கொடுக்கச் செய்து குடிக்க வைத்தானே,
சாமி ஆறுவேளை சாப்பிடுகிறது என்று நம்ப வைத்து புரோகிதன் வயிற்றுக்கு நாள்தோறும் படி அளக்க வைத்தானே,
கடவுளுக்கு வருடா வருடம் கலியாணம், குழந்தை குட்டிகள் கூத்தியாள் வீடு ஏற்பாடு செய்து, அந்த வீட்டுக்கும் கற்சிலைக் கடவுளைப் பக்தனை விட்டே தூக்கிச் செல்ல வைத்தானே, கடவுள் கற்பழித்தார் என் பதைக்கூட கண்ணில் ஒத்திக் கொள்ளும் பக்தியாகக் கற்பித்துவிட்டானே, தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பக்தனுக்கு கடவுள் மோட்சம் அளித்தார் என்பதைக்கூட கண்ணியமாக ஏற்றுக் கொள்ள வைத்தானே, மூத்திரக் குட்டையில் குளித்தால் முழுதாக பாவங்கள் தொலைந்து, மோட்சமும் கிடைக்கும் என்று பேராசையில் கிறுகிறுக்க வைத்தானே,
இந்த ஜென்ம கஷ்ட நஷ்டங்களுக்கு போன ஜென்ம பலாபலன் என்று மூளையைச் சேதாரப்படுத்தி சிந்தனையை முடக்கி வைத்தானே,
ஆணுக்கும், ஆணுக்கும் பிள்ளை பிறந்தான் அவன்தான் அய்யப்பன் கடவுள் என்ற ஆபாசத் தையும் நம்ப வைத்து, ஆண்டுதோறும் இருமுடி கட்டி லட்சக்கணக்கான பக்தர்களை காட்டுவிலங்காண்டிக் கோலத்தில் விரதம் இருக்கச் செய்து, கேரளாவை நோக்கி நடக்கவும் வைத்தானே, பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறந்தது என்று கதை கட்டி அதற்கொரு பண்டிகையையும் ஏற்படுத்தி மக்களின் பொருளையும், அறிவையும் பாழ்படுத்தி வருகிறானே, கற்சிலையிடம் பிரார்த்தனை செய்தால் நினைத்ததெல்லாம் கிடைக்கும் என்று நம்பவும் வைத்துச் சுரண்டலுக்கும் வழி செய்துகொண்டானே,
இவற்றை எல்லாம் பார்க்கும்பொழுது ஏப்ரல் முதல் நாள் மட்டும் தான் முட்டாள்தினமா?
ஒவ்வொரு நாளும் மத நம்பிக்கையா ளனுக்கு முட்டாள்தினமே!
1.4.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக