திங்கள், 17 ஜூலை, 2017

மதச்சார்பின்மை?




திருப்பூரில் சுதந்திர தினத்துக்குக் கொடியேற்று வதாகக் கூறிக்கொண்டு இந்து மதச் சின்னத்தையும் இணைத்துத் தேசியக் கொடியை ஏற்றியுள்ளது இந்து முன்னணி!

இந்தக் கூட்டம் அதி காரத்துக்கு வந்தால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை என்பது மண் மூடிப்போய்விடும் என்பதற்கான எச்சரிக்கை இது!

ஜெர்மன் சென்று ஹிட்லரிசத்தை நேரில் கற்றுக் கொண்டு இந்தக் கொடியை யும் கையோடு கொண்டு வந்த கூட்டம் இது. வேறு எப்படி நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்க முடியும்?

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் வெல்லும் என்று எதிர்பார்த்த பார்ப்ப னர்கள் உடனடியாக ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தனர். பிரான்சின் கை ஓங்கியது - சிங்கப்பூர், பர்மா வீழ்ந்தது என்றவுடன், பிரான்சு மொழியையும் கற்றுக்கொண்ட 24 காரட் தேசப் பக்தத் திலகங்கள் இந்த இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., வகையறாக் களான பார்ப்பனர்கள்.

உலகிலேயே உயர்ந்தது ஆரிய இனம்தான் என்று இறுமாப்புக் கொண்ட ஹிட்லரின் பேரப்பிள்ளைகள் இவர்கள்!

நான் கடவுளை வெறுக் கிறேன். ஏனெனில், ஏசுதான் கடவுள்; நான் ஏசுவை வெறுக்கிறேன்; ஏனெனில், ஏசு ஒரு யூதன்! என்றான் அடால்ப் ஹிட்லர்.

யூதன் என்கிற இடத்தில் எல்லாம், இசுலாமியன், கிறித்தவன் என்று போட்டுக் கொண்டால் -  ஹிட்லரிசத் தின் மறுபதிப்பான இந்தச் சங் பரிவார்ப் பார்ப்பனக் கும்பலுக்கு மிகப் பொருத்தமானதாகவே அமைந்து விடும்.

சங் பரிவார் அணியில் இருப்பவர்களிலேயே யோக் கியப் புருஷரான அடல் பிஹாரி வாஜ்பேயி (என் மகன்களிலேயே அதோ கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே - அவன்தான் யோக்கியன் என்றானாம் ஒரு தகப்பன் - அதனை இங்குப் பொருத்திப் பார்த் துக் கொள்க!) பூனாவில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜி யின் 325 ஆம் ஆண்டு விழாவில், பிரதமர் என்கிற ஹோதாவில் கலந்து கொண்டபோது பேசினார்: சத்ரபதி சிவாஜி இப் பொழுதுள்ள உருக்குலைக் கப்பட்ட மதச் சார்பின்மைக் கொள்கையை (னுளைவடிசவநன ளுநஉரடயசளைஅ)  கடைப்பிடிக்க வில்லை என்று திருவாய் மலர்ந்தார் (தி இந்து, 27.6.1998, பக்கம் 8).

இதன்மூலம் இன்றைய அரசியல் சாசனத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்தார். அந்தக் கூட்டம் தான் திருப்பூரில் தேசியக் கொடியோடு மதச் சின்னத் தையும் இணைத்து ஏற்றி யுள்ளது.

ஆமாம், இதெல்லாம் தேசியக் கொடி அவமதிப்பு இல்லையா - கூட்டம் சப்த நாடியும் அடங்கிப் போனது - ஏன்?

18.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...