ஞாயிறு, 16 ஜூலை, 2017

பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். சென்னை தொலைப்பேசி வட்டத்தின் பொதுமேலாளர் கூறியுள்ள தகவல் ஒன்று இன்றைய நாளேடுகளில் வெளி வந்துள்ளது.

பிறந்த தேதியின் அடிப்படையில் தினப் பலனை தொலைப்பேசி வழியாகத் தெரிந்துகொள்ளலாம் என்பதுதான் அந்தத் தகவல். ஒரு மாத அளவுக்கு இது நடக்கும்; வரவேற்பைப் பொருத்து பின்னர் நீட்டிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒரு நிமிடத்துக்கு ரூ.4 முதல் 6 வரை கட்டணமும் வசூலிக்கப்படு மாம்.

தொலைப்பேசியைக் கண்டுபிடித்த அன்டோனியாமெயூவும், அலக்சாண்டர் கிரகாம்பெல்லும் இப்பொழுது இருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்கள். விஞ்ஞானத்தை அஞ்ஞானத்துக்குப் பயன்படுத்தி நாசப்படுத்துகிறார்களே என்று தலை குனிந்திருப்பார்கள்.

இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பவர்கள் ஒன்றும் பாமரர்கள் அல்லர்படித்தவர்கள்அதுவும் தொழில்நுட்பப் பட்டதாரிகள்இவர்களுக்கு ஏன் இந்தப் புத்தி? மக்களுக்கு நல்லதே செய்யக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டு விட்டார்களா?

உயர்ந்த இடத்தில் இருக் கும் அதிகாரிகள் குறைந்த பட்சம் அரசியல் சட்டம் என்ன சொல்லியிருக்கிறது என்பதை தெரிந்திருக்க வேண்டாமா?

அடிப்படைக் கடமைகள் பகுதியில் (51) அறிவியல் மனப்பான்மை (Scientific Temper) மனிதநேயம், சீர்திருத்த உணர்வுகளைத் தூண்டுவது இந்தியக் குடி மகன் ஒவ்வொருவனின் அடிப்படைக் கடமை என்று (Fundamental Duty) கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படைக் கடமையைக்கூடத் தெரியாதவர்கள், தெரிந்திருந்தும், அதனை மதிக்காதவர்கள் அதிகாரி களாக இருக்கலாமா?

சோதிடம் அறிவியல் அல்ல என்று கூறி இருப்பவர்தான் இன்றைய குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் .பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.

பிறந்த தேதியின் அடிப்படையில் தொலைப்பேசி பலாபலன்களைக் கூறிடுமா? அப்படிச் சொன்னது பலிக்காவிட்டால், நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டி வரும் ; அதனை எதிர்கொள்ள தொலைப்பேசி நிருவாகம் தயாராக இருக் கட்டும்!

ஒரே நொடியில் லட்சக்கணக்கானவர்கள் மடிந்து வருகிறார்களே நிலநடுக்கத்தால், அவர்களில் அத்தனைப் பேரும் பிறந்த தேதியும், நேரமும் ஒன்றா? பதில் சொல்லட்டும் தொலை பேசி நிறுவன அதிகாரிகள்?

மக்களுக்குப் பொது சேவை செய்யவேண்டிய நிறுவனம் தேவையில்லாமல் அழிபழி செயல்களில் ஈடுபடவேண்டாம்  எச்சரிக்கை!


8.1.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...