சனி, 15 ஜூலை, 2017

பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி

அய்ங்குறுநூறு  கவிதை
பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி

``அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே! (அய்ங்குறுநூறு)

``அம்மா, அவர், குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!

``யாரடி, வருவது?

``பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுக்குடைய தலைவர் பரிமீதேறி வருகிறார்.

``சரி அதிலென்ன வியப்புக் காண்கிறாய்?

``அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!

``அதிலென்னடி வேடிக்கை! மகாவேடிக்கை!

குதிரை தலையை அசைக்கும்போது கொத்தாக இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால், சிரிப்புண்டாகிறது!

``குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?
``ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சுக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப்போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!

``போடி குறும்புக்காரி

வீதிவழியே செல்லுகிறான் குதிரை வீரன்; குதிரை தலையசைக்க, அதன் குடுமி ஆடுகிறது. இதைக்கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்

கண்டதையும் கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந் தமிழகத்திலே. இக்கருத்துக்கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, அய்ங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது,

நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...