தாழ்த்தப்பட்டவர்களைப் பார்ப்பனர்கள் நடத்தியது ஒரு புறம் இருக்கட்டும். தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றிய பெரும்புகழ் ஓச்சிக் கொண்டிருந்த பெரியாரையே எப்படி நடத்தினார்கள் இந்தப் பார்ப்பனர்கள்? இதோ பெரியார் எழுத்தாலேயே அதனைத் தெரிந்து கொள்ளலாமே!
காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டதில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனுபோகத்தை இங்கு எடுத்துச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது நானும் உயர்திரு எஸ். சீனுவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய்த் திண்டுக்கல்லுக்குப் போனபோது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட இவை அப்படியே இருக்க அதன் பக்கத்தில்தான் இரவும் இலை போடப்பட்டுச் சாப்பிட்டேன்.
மற்றொரு சமயம் நானும், தஞ்சை திருவேங்கடசாமிப் பிள்ளையும் காங்கிரஸ் பிரச்சாரமாகப் பெரியகுளத்திற்குப் போனபோதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலைப் பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு, காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப்பக்கத்தில் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருக்கவே சாப்பிட்டு வந்தோம்.
(குடிஅரசு _ 10_1-_1948)
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
(குடிஅரசு _ 10_1-_1948)
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக