ஞாயிறு, 16 ஜூலை, 2017

டாக்டர் மு.வரதராசனார்



சாதியின் அறிகுறி உணவு விடுதியின் தலைப்பில் கொட்டை எழுத்துகளில் இருப்பது வேறு எத்நாகரிக நாட்டிலும் காணமுடியாத மாசு ஆகும்இந்த மாசைப் போக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்தார் பெரியார் .வெ.ரா. நாகரிகமான மக்கள் வாழும் இந்த நாட்டில், சாதியின் வாலை ஒழித்தது போலவே, உணவு விடுதிகளின் பெயரில் உள்ள பிராமணாள் என்ற சொல்லையும் எடுத்துவிடுவார்கள் என எதிர்பார்த்தேன். எதிர்பார்த்தவாறு நடக்கவில்லை சொல்லாமலேயே செய்ய வேண்டிய சீர்திருத்தக் கடமையை சொல்லியும் செய்யவில்லை தமிழர்.

ஆயினும் ஒரு காலம் வரும். சாதி வேறுபாட்டை ஒழித்தால் அல்லாமல் நாட்டில் அமைதி ஏற்படுத்த முடியாது என்ற காலம் வந்தால், அப்போது எல்லோரும் சேர்த்து வருந்த நேரும். அன்று பெரியார் .வெ.ரா.வின் தொண்டு எல்லார் உள்ளத்திலும் வாழும்.

(தந்தை பெரியார் 79-ஆவது பிறந்த நாளையொட்டி மலேசியாவில் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் எழுதியக் கட்டுரையிலிருந்து)


நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...