புகையிலையினால் வரும் ஆபத்து குறித்து நிறைய தகவல்கள் நாள்தோறும் வந்து கொண்டு இருக்கின்றன. உலகில் தேவைப்படும் புகையிலையில் 85 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தியாகிறதாம். 44 லட்சம் தொழிலாளர்கள் பீடி, சுருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகையிலையை உபயோகிப்பதன் காரண மாக ஆண்டு ஒன்றுக்கு மரணத்தை வரவழைத் துக் கொள்பவர்கள் 8 லட்சம் பேர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அக்பரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் இருந்து ஒரு கிறித்துவப் பாதிரியாரால் புகையிலை இந்தியா வந்தடைந்தது.
இந்தப் புகையிலை பற்றி இந்து மதப் புராணமான பத்ம புராணம் இவ்வாறு கூறுகிறது.
தாம்ப்ர பாணர தம் விப்ரம் நரஹ
தாதாரோ நரகம் யாதிப் ராமணோக் ராம சூக்ர ஹ:
இதன் கருத்து : தரும வான்கள் சுருட்டுப் பிடிக் கும் பிராமணர்களுக்குத் தருமம் செய்யக்கூடாது. அப்படித் தருமம் செய்யும் தருமவான் நரகத்துக்குத் தான் போவான். மேலும் சுருட்டுப் பிடிக்கும் பிராம ணன் அடுத்த ஜென்மத் தில் பன்றியாய்ப் பிறப்பான் என்றும் கூறப்பட்டுள்ளது.
அக்பர் காலத்தில் சுருட்டு அறிமுகமாகி இருந்தாலும், அவுரங்கசீப், குரு கோவிந்தசிங் ஆகிய இருவரும் சுருட் டைத் தடை செய்துள்ளார் கள். ஒரு
300 அல்லது 350ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு அறிமுக மான சுருட்டுப் பற்றி பத்மபுராணம் பேசுகிறது என்றால், இந்தப் புராணம் அக்கால கட்டத்திற்குப் பின்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
சுருட்டுக் குடிப்பதால் ஆபத்து என்று சொல்லும் கருத்து மிகவும் நியாயமான ஒன்றுதான். அதில் கூட பிராமணர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டிருப் பதைக்கவனிக்க வேண் டும்.
அது ஒரு புறம் இருக் கட்டும். சுருட்டுக் குடிக்கும் பிராமணன் அடுத்த ஜென்மத்தில் பன்றியாய்ப் பிறப்பான் என்று பத்ம புராணத்தில் கூறி இருப் பதால், இப்பொழுதெல்லாம் தெருக்களிலும், சாக்கடையிலும் திரிந்து கொண்டிருக்கும் இந்தப் பன்றிகள் எல்லாம் யார்? போன ஜென்மத்தில் சுருட்டுக் குடித்த பார்ப்பனர்கள்தானே. அப்படி என்றால் இந்தப் பன்றிகளுக்கு சாமா சாஸ்திரி, குப்புசாமி அய்யர், ஆரா வமுது அய்யங்கார், பூவராக சர்மா என்று செல்லமாகப் பெயர் சூட்டி அழைக்கலாம் அல்லவா?
22.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக