உன் திறமையும் தெரியும். சொல்லிக் கொடுத்தவன் திறமையும் தெரியும்
ஒருவனுக்கு நன்றாக கறி சாப்பாடு போட்டு வளர்க்கிறோம். இன்னொருத்தன் மூன்று நாள் பட்டினியில் கிடந்தவனாய் இருக்கிறான். இரண்டு பேரையும் சண்டைக்கு விட்டு, கறி சாப்பாடு சாப்பிட்டவன் ஜெயித்தால் அதற்குத் தகுதி -_ திறமை என்று பேரா? பட்டினிக் கிடப்பவனுக்கும் அதே கறி சாப்பாட்டைப் போடு, அப்புறம் சண்டைக்கு விட்டால் இரண்டு பேர் தகுதி _ திறமையும் ஒன்றாகத் தானே இருக்கும். பறையன் டாக்டராக வந்து ஊசி போடுகிறான். அவன் ஊசி போட்டதாலே எந்த எந்த நோயாளி செத்துப்போய் விட்டான்? அவன் என்ஜினீயராக வந்து கட்டின பாலம் எது இடிந்து விட்டது? அப்போ பறையனுக்கும் தகுதி வந்து விட்டதா, இல்லையா? தகுதி _ திறமை என்பது உயர்ந்த ஜாதிக்காரனிடமும், இந்தப் பரம்பரை உத்தியோக ஆதிக்கக்காரனிடமும் தானா இருக்கிறது?
இப்படி தகுதி _ திறமை என்று கொஞ்ச நாளாகவா நீங்க ஏமாத்துறீங்க? நாலாயிரம், அய்யாயிரம் ஆண்டுகளாகவே ஏமாத்தி வருகிறீர்கள்!
மந்திரம் தந்திரம் என்று
சொல்லி ஏமாத்தி கொஞ்ச நாள் ஆதிக்கம் செலுத்தினீர்கள். இப்போது படிப்பு என்று சொல்லி ஏமாத்துகிறீர்கள். புத்தகம் படித்து விட்டால் தகுதி _- திறமை வந்து விடுமா? இல்லை வந்து விட்டதாக அர்த்தமா? உன் திறமையும் எனக்குத் தெரியும். சொல்லிக் கொடுத்தவன் திறமையும் எனக்குத் தெரியுமே! என்று காமராசர் கர்ச்சித்தாரே?
(நூல்: தகுதி - _ திறமை மோசடி!)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக