ஞாயிறு, 16 ஜூலை, 2017

அய்யோப்பா!


அய்யப்பன் கடவுள் பற்றி ஆயிரம் ஆயிரம் கேள்விகளை திராவிடர் கழகம் எழுப்பியுள்ளது. இதுவரை முறையான பதில் இல்லை. அரிகரப் புத்திரன் என்கிறீர்களே. அரியும் ஆண், அரனும் ஆண். அப்படியிருக்கும்போது எப்படி ஆணுக்கும் ஆணுக்கும் அய்யப்பன் பிறந்திருக்க முடியும்? என்று கேள்வி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். அது கடவுள் சமாச்சாரம்; கேள்வியெல்லாம் கேட்டுத் தொலைக்கக் கூடாது என்பதுதான் ஒரே பதில்.

ராமஜென்மபூமி பற்றி கேட்டாலும், ராமன் பாலம் பற்றி பிரச்சினை எழுப்பினாலும், பா... உள்ளிட்ட பக்தகே()டிகள் சொல்லும் ஒரே பதில் இது நம்பிக்கையைப் பொறுத்த விஷயம் இதில் பகுத்தறிவுக்கோ, சட்டத்துக்கோ இடம் இல்லை என்பதுதான்.

சரக்கு இல்லாதவர்கள் காற்றில் சலாம் வரிசை ஆடுகிறார்கள்.

இப்பொழுது அய்யப்பன் கோயில் பற்றி ஒரு சங்கதி  நாமாக இட்டுக் கட்டிச் சொன்னதல்ல அரைப் பார்ப்பன ஏடான குமுதம் ரிப்போர்ட்டர் தரும் தகவல் (10.6. 2010  பக்கம் 38, 39)
அய்யப்பன் கோயிலில் ஊழல் அமர்க்களமாக நடக்கிறதாம். அய்யப்பன் கோயில் வருமானத்தை விட செலவுதான் அதிகமாம். இந்த நிலை நீடித்தால் கோயிலை ஊத்தி மூட வேண்டியதுதானாம்.

ஒரு முறைஅரவணை தயாரித்தால் 250 மி.லி. கொண்ட ஆயிரம் டப்பாக்களில் அடைத்து விற்கலாம் என்பது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் விதி. அப்படியிருக்க கடந்த சீசனில் 955 டப்பாக்கள் மட்டுமே தயாரித்ததாக கணக்குக் காட்டிய தேவஸ்தான சிப்பந்திகள் ரூ 50 விலையுள்ள 66,577 டப்பாக்களை கூலிங் சேம்பரில் மறைத்து வைத்து விற்பனையும் செய்திருக்கிறார்கள்மேலும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட அரிசி, வெல்லம் போன்ற பொருள்களில் அவர்கள் கை வைக்க, அத்தனையையும் கண்டுபிடித்த தேவஸ்வம் போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் இதை அரசுக்கு அறிக்கையாகவும் சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த ஊழலின் மய்யமாக சபரிமலை மாறிவிட்டது என ஆளும் கட்சி அமைச்சரான சுதாகரன் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இதோடு முடிந்ததா? நீதிமன்றம் என்ன சொன்னது?

தேவஸ்வம் ஊழியர்கள் 68 பேரின் இட மாறுதலுக்கெதிராக அதன் ஊழியர்கள் கூட்டமைப்பு கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் தேவஸ்வம் போர்டை கடுமையாகச் சாடியிருக்கிறதுஅதில், தேவஸ்வம் போர்டில் ஊழல் என்பது ஒரு பொதுத் தத்துவ மாகவே மாறிவிட்டது என்று கூறியுள்ளது.

இவ்வளவு நடக்கிறது. அய்யப்பன் என்ன செய்கிறார்? குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டு இருக்கிற இவர்தான் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்துக் கிழிக்கப் போகிறாராம்ஹி... ஹி.... வாயால் சிரிக்க முடியவில்லையே!

6.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...