புராதன பொதுவுடைமையில் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது. சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும்போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும், ரோமிலும் இருந்தது போன்ற அடிமை முறை சிந்து சமூகத்தில் இருந்திருக்க வில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் - அடிமைகள் - எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்கு பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.
இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கே உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது... அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாததுமான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும் இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கைகளுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.
(ஈ.எம்.எஸ்.
நம்பூதிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36-ஆம் பக்கத்திலிருந்து)
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக