தினமலர் பதில்
கேள்வி: இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதைவிட ஏதாவது கைத்தொழில் கற்றுத் தந்தால் என்ன?
பட்டத்தை வைத்துக் கொண்டு ரோடு ரோடாக அலைந்து திரிவதை விட, கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தொழில் செய்யலாமே?
பதில்: கற்றுத் தருவதைவிட - என்பதைவிட - நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம்.
(படித்து, கேட்டுத் தெரிந்து கொண்டதால் ராம் போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ எனக் கத்தி பைசா பெறாத காரணங்களைக் கூறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டுக் கல்வி- மாலையில் தொழிற்கல்வி) தொடரவிடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்.
(தினமலர் -வாரமலர் 4-_4-_2010)
ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டப்படி அரை நேரம் படித்து, அரை நேரம் குலத் தொழிலைச் செய்ய விட்டிருந்தால், இந்தத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்த அளவு படித்திருப்பார்களா? சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் 89 சதவிகித மாணவ,
மாணவிகள் பார்ப்பனர் அல்லாதார் என்று துணைவேந்தர் க.திருவாசகம் சொல்லும் (20-.11-.2010) நிலை உருவாகி இருக்காதல்லவா? எல்லாம் பார்ப்பனர்களின் வயிற்றில் அல்லவா அறுத்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நிலை பறிபோய்விட்டதே என்கிற ஆத்திரம் 56 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவாளுக்கு அடங்கவில்லை.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை மனுநீதிதான்
ஆதிக்கபுரியைக் கட்டிக்காக்கும் கோட்டை.
சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.
(மனுதர்ம அத்தியாயம் 10 சுலோகம் 96)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக