ஞாயிறு, 16 ஜூலை, 2017

உருப்படுவார்களா?

தமிழ்நாட்டுத் திரைப்படங்கள்பற்றி பல்வேறு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ள கால கட்டம் இது.

சில திரைப்பட இயக்குநர்கள் சொல்லுகிறார்கள், இந்தப் படத்தில் இந்தச் செய்தியை முக்கியமாக மக்களுக்குச் சொல்லி இருக்கிறோம் என்று கித்தாப்பாகப் பேசுகிறார்கள்.

அவர்களிடத்தில் குறைந்த பட்சம் அடிப்படைப் பகுத்தறிவு கூட இருப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

படத்திற்குப் பூஜை போடுவது என்று வைத்துள்ளார்களேபூஜை போடுவதால் படம் வெற்றி பெறுமா? இந்தச் செய்தி ஏடுகளில் வெளிவரும்போது இளைஞர்கள் என்ன செய்தியைப் பெறப் போகிறார்கள்? வெற்றிக்குப் பூஜை என்பது முக்கியம் என்று அவர்கள் எண்ணுவார்களேயானால், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற முடியுமா? அது தன்னம்பிக்கையைத்தான் ஊட்டுமா?

.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள விநாயகன் கோவில் இதில் பிரசித்தி பெற்றதாம்! இனமுரசு சத்யராஜ் பெரியார் திடல் நிகழ்ச்சி ஒன்றில் சொன்னாரே  .வி.எம். ஸ்டூடியோ விநாயகர் கோவிலுக்குத் தேங்காய் உடைத்துத் தொடங்கப்பட்ட எத்தனையோ படங்கள் ஊத்திக் கொண்டனவே என்றார்.

திரைப்படத்தின் வெற்றிக்கு எது தேவை என்பதிலும்கூட தெளிவு இல்லாதவர்கள் உலகுக்கு என்ன செய்தியைக் கொடுக்கப் போகிறார்கள்?

நடிகர் செந்தில் மகன் நவீன் கதாநாயகனாக அறிமுகப்படம் ஒன்று; அதன் பெயர் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு.

அந்தப் படத்துக்காக அதே .வி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில்தான் பூஜை நேற்று!
பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. குத்துவிளக்கும் ஏற்றப்பட்டது (கண்களைப் பறிக்கும் வெளிச்சத்தில் சினிமா எடுக்கக் கூடியவர்கள் இன்னும் குத்து விளக்கை விடவில்லை  அவ்வளவு வெளிச்சமான அறிவு!).

பந்தல் துணியின் ஒரு முனை எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்குத் திரியில் பட்டு விட மளமளவென்று தீ பரவியது! அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியிருக்கிறார்கள்.

இந்த விபத்தைக்கூடத் தடுக்க இயலாத அந்த .வி.எம். குத்துக்கல்லு (பிள்ளையார்) என்ன சாதிக்கப் போகிறது?

கடைசியில் என்ன சொல்லப் போகிறார்கள்? பிள்ளையார் விடயத்தை அம்போ என்று விட்டுவிடுவார்கள். சகுனம் சரியில்லை என்று இன்னொரு மூட நம்பிக்கையினைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள்.

நடிகர் செந்தில் மகனுக்கு நேரம் சரியில்லை என்று கூறித் தோஷம் கழிக்கவும் கிளம்பி விடுவார்கள். ஒரு பிள்ளையார் மூட நம்பிக்கை எத்தனை எத்தனை மூட நம்பிக்கைக் குட்டிகளைப் போடுகிறது பாருங்கள்.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சொல்லுவதுபோல உருப்படுவார்களா இவர்கள்?

9.2.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)  

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2, 

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...