ஆனந்தவிகடன்
இதழில் (26.5. 2010 ) கேள்வி ஒன்றுக்குப் பதில்:
கேள்வி: ஞானியர்கள் தம் கடைசிக் காலத்தில் சொல்லி வைத்தாற்போல் புற்று நோயை அனுபவித்து இருக்கிறார்களே. அதற்கு ஏதேனும் தெய்வீகக் காரணங்கள் உண்டா? பதில்: மகானாக இருந்தாலும் சரி,
மடையனாக இருந்தாலும் சரி,
உடம்பு என்ற வண்டி பொதுவானது. அது எப்போது வேண்டுமானாலும் ரிப்பேர் ஆகலாம். நீங்கள் சொல்வது தவறு. ரமண ரிஷிக்கு மட்டும்தான் தோள் பகுதியில் புற்றுநோய் வந்தது. அதை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டார். விவேகானந்தருக்குச் சர்க்கரை நோய் இருந்தது. ஹார்ட் அட்டாக்கில் மறைந்த மகான்களும் உண்டு. இதற்கெல்லாம் தெய்வீகக் காரணம் எல்லாம் எதுவும் கிடையாது. வாட்ட சாட்டமாக வளர்ந்து, களியாட்டங்களில் மூழ்கி, எல்லாத் தப்புகளையும் செய்யும் போலிச் சாமியார்கள் கடைசி வரை எந்த வியாதியும் வராமல் நடமாடவும் முடியும். இதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?!
இதுதான் ஆனந்த விகடனின் சாமர்த்தியமான பதில்.
ரமண ரிஷி,
சாயிபாபா இவர்களின் தனி மகிமை என்று எதை வைத்துக் கூறப்படுகிறது? பக்தர்களுக்கு இவர்கள் ஆசி வழங்கினால், நொடிப் பொழுதில் அவர்களின் நோய்கள் பறந்து போய் விடுகின்றன என்றுதானே கூறுகின்றனர். ரமணா பெயரில் மருத்துவமனைகளைக் கட்டுவதும்,
அந்த மருத்துவமனையில் மூலைக்கு மூலை ரமணரிஷியின் படம் தொங்குவதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது.
இவ்வளவு சக்தி வாய்ந்த ஒருவருக்கு, தெய்வீக முலாம் பூசப்படுபவருக்கு புற்று நோய் வரலாமா என்ற கேள்வி நியாயமானது தானே!
இது கர்ம பலன் என்று சொல்லித் தப்பிக்கப் போகிறார்களா? அது கர்மபலன் என்றால், அதனை இந்த மகான்கள் எப்படி மாற்றியமைக்க முடியும்? மகான், மகரிஷி என்று விளம்பரப்படுத்துவதற்கு அவர் கையசைத்தால், கர்ம வியாதிகள் போகும்; அவரின் காருண்ய கண்பட்டால் கடுமையான நோய்கள் கரைந்து போகும் என்று சொல்லுவது; அப்படிப்பட்டவர்களுக்கே கர்ம நோய்களும், கடுமையான நோய்களும் வந்துள்ளனவே என்று சந்தேகத்துடன் வினா தொடுத்தால், தெய்வீகக் காரணம் எதுவும் கிடையாது என்று நைசாக நழுவிக் கொள்வது! ஏன் இந்த இரட்டைவேடம்?
பக்தியையும், பகவானையும் பாதுகாக்கப் பார்ப்பனர்கள் ரொம்பத்தான் சிரமப்படுகிறார்கள்.
கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக)
வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும்.
25.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக