வழக்கம் போலவே தினமலர் வளரும் சமூக நீதிச் செடியின் மீது நெருப்புத் துண்டங்களை அள்ளிக் கொட்டுகிறது.
அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் மன்னர் ஜவகர்: வரும் 16 ஆம் தேதி முதல், பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன
டவுட் தனபாலு: ஏன் ரெண்டரை லட்சத்தோட நிறுத்திட்டீங்க...? பிளஸ் 2 பாஸ் பண்ணின ஆறேகால் லட்சம் பேரையும் இன்ஜினீயரிங்ல சேர்த்துக்க வேண்டியதுதானே... அதான். அந்தப் படிப்புக்கு எந்தத் தகுதியும் தேவையில்லைன்னு ஆகிப் போச்சே. (தினமலர் 14.5.2011)
தி.மு.க. ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குத் தகுதி மதிப்பெண்கள் கடந்த ஆண்டு 2010-2011 அறிவிக்கப்பட்டன.
பொதுப் பிரிவுக்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 விழுக்காடு மதிப்பெண்கள்; பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர்களுக்கு 40 விழுக்காடு மதிப்பெண்கள். தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு 35 விழுக்காடு மதிப்பெண்கள் என்று அறிவிக்கப்பட்டன.
இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1,63,131. இதில் பொதுப் பிரிவினர்களுக்குக் கிடைத்த இடங்கள் 5,662; மீதி இடங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர், தாழ்த்தப்பட்ட, மற்றும் மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்தன.
இவர்கள் எல்லாம் யார்? முதல் தலைமுறையாக பொறியியல் கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்தவர்கள்.
போதும் போதாதற்கு - தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்று வெறும் ஆணையாக அல்ல; சட்டத்தையே முதல் அமைச்சராக இருந்த கலைஞர் நிறைவேற்றிவிட்டார். நீதிமன்றம் வரை சென்று முட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. பொறுக்குமா பூணூல் கோத்திரக் கும்பலுக்கு? தினமலரின் அவுட்டுத் திரி ஆத்திரக் கூத்து ஆடாதா? அதன் வெளிப்பாடாகத் தான் டவுட் தனபாலாக இன்று தினமலரில் வெளி வந்திருக்கிறது.
தகுதி திறமை போய் விடுமாம்! என்ன அந்த தகுதி, திறமை? தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கா பொறியியல் பட்டதாரி சான்றிதழைக் கொடுக்கப் போகிறார்கள்?
எனக்கு வேதமும் தெரியாது, வெங்காயமும் தெரியாது என்று சொல்லும் தந்திரியைத்தானே அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கிறார்கள்?
கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் சொல்கிற பார்ப்பானுக்கெல்லாம் தகுதி தேவையில்லை.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் பார்ப்பனர்களின் மனுதர்மம். இவற்றிற்கு மாறாக நடந்த காமராசரை ராட்சசர் என்றனர். இப்பொழுது கலைஞரையும் அதே பார்வையில் பார்க்கின்றனர். தமிழா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஏமாறப் போகிறாய்?
14.5.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக