திங்கள், 17 ஜூலை, 2017

வாஸ்துவா?


பக்தி பெருக்கெடுத்து வெள்ளமாக நுரை தள்ளி ஓடுகிறது. அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.

18 படிகளைக் கடந்து அய்யப்பனைத் தரிசிக்கும் பாதை குறுகலானது; எனவே, படிகளை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவ சியம் என்று தேவஸ்வம் போர்டுகருதுகிறது.

கூடாது - கூடாது - மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பழைய சம்பிர தாயத்தை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே கட்டிய வாஸ்து நிலை பாதிக்கப்படும் என்று இன்னொரு சாரார் கச் சையை இறுக்கிக் கட்டுகின் றனர். கோவிலின் தலைமைத் தந்திரியும் இந்தக் கட்சியில் தான் இருக்கிறார்.

பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டாமா? மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் வேண்டாமா? என்று கேள்வி எழுப்புவதில் நியாயத்தின் வெளிச்சம் தெரிந்தாலும், பழைய சம்பிரதாயங்களை மாற்றக் கூடாது என்பவர்களின் கருத்துதான் மூட மக்கள் மத்தியிலே விடாப்பிடியாக நிற்கும்.

பக்தர்களின் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது 5000 கழிவறைகள் தேவைப்படும் - இப்பொழுது 2000 தான் உள்ளது என்று தேவஸ்தான தலைமைப் பொறியாளர் கே. ரவிக்குமார் கூறினார். இது குறித்தெல்லாம் ஆகமத்திலா இடம் பெற்றிருக்கும்? (அய்யப் பனே மலம் கழிப்பதுபோலத் தானே உட்கார்ந்திருக் கிறார்!).
அதேநேரத்தில், இன்னொரு கேள்வியும் இருக்கவே செய்கிறது. அய்யப்பன் கோயிலைப் பொருத்தவரை இதற்குமுன் மாற்றமே நிகழ்ந்தது இல்லையா?

அய்யப்பன் கோயிலே பற்றி எரிந்து, அதன் பின் புதிதாகக் கட்டி எழுப்பவில்லையா? திருவரங்கம் கோயில் பற்றி எரிந்து மூலவிக்கரகமான சிறீ ரங்கநாதரே வெடித்துச் சிதறிய நிலையில் புதிய பொம்மை - அதாவது சிறீரங்கநாதர் சிலை கொண்டு வந்து வைக்கப்படவில்லையா?

கோயில் கருவறைக்குக் குளிர் சாதன வசதி (ஏர் கண்டிசன்) செய்யப்பட்டிருப்பது எந்த ஆகமத்தின் அடிப்படையில்?

தீவட்டி வெளிச்சத்துக் குப்பதில் கோயில்களில் நியான் விளக்குகள் ஜொலிக் கின்றனவே - இதுபற்றி வைகனாச ஆகமத்தில் கூறப்பட் டுள்ளதா?

இந்தச் சம்பிரதாயங் களைப்பற்றி எல்லாம் விலா வாரியாகப் பேசுகிறார்களே - அய்யப்பன் கோயில் தலை மைத் தந்திரி விபச்சாரப் பெண் வீட்டில் சிக்கினாரே - அய்யப்பன் கோயிலை ஒட்டிய தந்திரியின் தங்கும் இடத்தில் மது பாட்டில்கள் இருந்தன என்று ஏடுகள் எல்லாம் வெளிப்படுத்தினவே - எல்லா வற்றிற்கும் மேலாக மகர ஜோதி என்பதே பொய் - தேவஸ்வம் போர்டு செயற்கையாக ஏற்பாடு செய்வதுதான் என்று கேரள மாநில தேவஸ்வம் துறை அமைச்சர் ஜி. சுதாகரனும், அதற்கு முன்னதாகவே முத லமைச்சர் .கே. நாயனாரும் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டு விட்டனரே - இந்த ()யோக்கியதையில் இதற்கு மேலும் வாஸ்து, வெண்டைக்காய், புடலங்காய் என்று பேசுவது எல்லாம் யாரை ஏமாற்ற?

13.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக