ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள், முழுநேர ஊழியர்கள்பற்றி கட்டுக்கட்டாகத் தகவல்களை அவிழ்த்துக் கொட்டுவார்கள். அவர்களைப்போல கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனவர்கள் யார் இருக்கிறார்கள் என்பார்கள்.
சேலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.,
முகாமிலே இன்றைக்குக் கொலைக் குற்றவாளி என்று குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறினார்.
குழந்தைகள் கட்டுப்பாடான சூழ்நிலையில் அறநெறி, நேர்மை, தெய்வபக்தி மற்றும் தேசப்பற்றுடன் வளர அவர்களை ஆர்.எஸ்.எஸ்.,
முகாமில் பயிற்சி பெற பெற்றோர் அனுப்பி வைக்க வேண்டும். உலகிலேயே இத்தகைய சிறப்புக் கொண்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.,தான்
(தினமணி, 5.6.1982) என்றெல்லாம் புகழாரம் சூட்டினார்.
ஆர்.எஸ்.எஸ்.,
சேவகர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகப் பணி செய்யக்கூடியவர்கள் என்பதெல்லாம் அவர்களுக்குள்ள தனித் தகுதிகளாகப் பேசப்பட்டன.
இப்பொழுது நிலைமை என்ன? ஆர்.எஸ்.எஸ்.,
இணைய தளத்திலே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். எதற்காக? ஆர்.எஸ்.எஸ்.,
சேவகர்கள், பிரம்மச்சாரி விரதத்தை தூக்கி எறிந்துவிட்டுத் திரு மணம் செய்துகொள்ளலாமா என்பதுதான் அந்தக் கருத்துக் கணிப்பு!
இதன்மூலம் என்ன தெரிகிறது? திடீரென்று ஏன் இவர்கள் இந்த வகையில் கருத்துக் கணிப்பை நடத்திடவேண்டும்? திருமணம் செய்துகொண்டு பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு வந்துவிட்டதைத் தானே இது காட்டுகிறது. அவர்களின் ஆசையைக் கருத்துக் கணிப்பு என்கிற ஜோடனைமூலம் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதுதானே உண்மை.
712 பேர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட தாம். அதில் 57 சதவிகிதம் பேர் ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் இனி பிரம்மச்சாரிகளாக வாழவேண்டாம். கலியாணம் கட்டிக்கொள்ளலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்களாம்.
இதுதானே அவர்களின் ஆசை? அதனைச் கருத்துக் கணிப்பு என்கிற சடங்கை நடத்தி இப்படி ஒரு நாடகம்?
இவர்கள் ஏன் பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று விதி வைத்திருந்தார்கள்? அதனை ஏன் இப்பொழுது மாற்றிக் கொள்கிறார்கள்? இந்த இரண்டுக்குமே அர்த்தம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
5.10.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக