ஞாயிறு, 16 ஜூலை, 2017

பார்ப்பனச் சேரி



ஆந்திரப்பிரதேசத் தலைநகர் அய்தராபாத்துக்குப் பக்கத்தில் அக்கிரகாரம் ஒன்று உருவாகிறது. அய்தராபாத்துக்கு 90 கி.மீ. தூரத்தில் நாக்பூர் சாலையில் 1200 ஏக்கர் பரப்பளவில் பார்ப்பனச் சேரியாம். 1000 பார்ப்பனக் குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 1000 சதுர அடி மனையாம். 4 லட்ச ரூபாய் விலையாம்.

அங்கு மனை வாங்கச் சில பாரதிய ஜனதாக் கட்சிக்காரர்கள் முயன்றனராம். பார்ப்பனர் அல்லாதார் என்பதால் விற்க முடியாது என்று கூறி விட்டார்களாம். அவ்வளவு ஜாதி வெறி! டாக்டர் பி.கமலாகரசர்மா என்பவர் இதன் உரிமையாளராம். வெளிநாடு வாழ் இந்தியராம்! இது செய்தி.

எவ்வளவு பச்சைப் பார்ப்பன ஜாதி வெறி. பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள் என்கிறார்களே! உண்மையா?

 (‘விடுதலை’ 5-.01.-2008)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக