ஞாயிறு, 16 ஜூலை, 2017

கறுப்புச்சட்டை மாநாட்டு


மதுரையில் நடைபெற்ற முதலாவது மாகாண கறுப்புச்சட்டைப் படை மாநாட்டுப் (12.5.1946) பந்தல் மதுரை தேசிய வியாதி திருவாளர் வைத்தியநாதய்யர் தூண்டுதலால் காலிகள் கொளுத்தினார்கள்! மதுரையில் நடமாடிய அத்தனைக் கறுஞ்சட்டைத் தோழர்களையும், பெண்களையும் கூலிகளை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார்கள்!  20 ஆயிரம் கறுஞ்சட்டைத் தோழர்கள் திரண்டிருந்தனர். அவர்களை ஏவிவிட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும்? அந்த நேரத்தில்கூட பெரியார் நிதானத்தை இழக்கவில்லை.
அந்த வன்முறையைக் கண்டு அஞ்சிடவில்லை. மாறாக பெரியார் குடிஅரசில் என்ன எழுதினார்?

மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம்தான் நாம் மனிதத் தன்மை பெற்று, திராவிடத்தைப் பெறப் போகிறோம். ஆகவே நாம் செய்ய வேண்டியது யாவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும். எங்கும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும்; உடையிலும் கறுப்புக் கொடி சின்னம் துலங்க வேண்டும்.

இந்தக் காரியம்தான் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும், வீரமும் கொண்டோமா என்பதை உறுதிப் படுத்தும் (குடிஅரசு 19.5.1946)

_ என்று மதுரை படிப்பினை என்ன? என்ற தலைப்பில் கருத்துக் கூறியிருக்கிறார் தந்தை பெரியார்.

வன்முறையைக்கூட எந்த வகையில் எதிர்கொண்டார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக