சனி, 15 ஜூலை, 2017

நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பிராமணர்களாகவே வக்கீல் --- ம.பொ.சி


சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலே மிதவாதிகளைக் கொண்ட பழைய கட்சியாரில் வக்கீல்களே அதிகம். ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகா சபைகளிலே, வைஸ்ராயின் நிர்வாக சபைக்கும், சென்னை மாநில கவர்னரின் நிர்வாக சபைக்கும் இந்தியர்களை நியமிக்க வேண்டுமென்றும்; உயர்நீதிமன்ற நியமனங்களிலே இந்தியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டு மென்றும் கோரித் தீர்மானம் கொண்டு வந்ததே இந்த மிதவாதக் கூட்டம்தான்.

இத்தகைய பதவிகளைத் தாங்கள் அடைய முடியுமென்ற நம்பிக்கையின் பேரிலேயே சென்னை மாகாண வக்கீல்கள் காங் கிரஸ் கூடாரத்துக்குள்ளேயே குடியிருந்தனர். காங்கிரஸ் மகாசபையில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே சேர முடியுமென்ற நிலை இருந்ததும், இந்த மிதவாதக் கூட்டம் அந்த மகாசபையிலே செல்வாக்குப் பெறுவதற்குச் சாதகமாக இருந்தது. ஆங்கிலம் படித்தவர்களிலே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்  ஆசிரியர்களாக இருப்பவர்களும், அரசாங்க உயர் அலுவலர்களும் காங்கிரசில் ஈடுபட இயலாதவர்களாக இருந்தனர். ஈடுபட்டாலும், பிரிட்டீஷ் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அளவுக்குச் செயல்பட முடியாதவர் களாகவும் இருந்தனர். இதனால், ஆங்கிலம் படித்தவர்களிலே சுதந்திர மாக செயல்படுவதற்கு அதிக அள வில் சந்தர்ப்பம் பெற்றிருந்தது வக்கீல் கூட்டம்தான்.

பிற்காலத்தில் சென்னை  மாகாணத்திலே ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது இந்த வக்கீல்களின் ஆதிக்கம்தான். இவர்களிலே மிகப் பெரும்பாலோர் பிராமணர்களாக இருந்தாலும் அரசாங்க நீதித்துறை, நிர்வாகத்துறை, பார்லிமெண்டரித் துறை ஆகியவற்றில் எல்லாம் இந்த பிராமண வக்கீல்களே நியமனம் பெற்றதாலும், இவர்களுடைய ஆதிக்கத்துக்கு வகுப்புவாத வண்ணம் பூச ஜஸ்டிஸ் கட்சியால் முடிந்தது. அந்நாளில் சட்டம் படித்த வக்கீல்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு அதிகமானோர் பிராமணர்களாகவே இருந்தனர். ஆகவே, அவர்கள் இந்தியன் என்ற பெயரால் அரசாங்கத் துறைகள் அனைத்திலும் நியமனம் பெறுவது இயற்கையாக இருந்தது என்று எழுதியுள்ளாரே.

(விடுதலைப் போரில் தமிழகம்- _ .பொ.சி. பக்கம் 173_-174)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி, 

ஆசிரியர் “ கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக