எல்லாவற்றிலும் பார்ப்பன மயம் என்ற கொடி ஆணவத்தோடு பறந்து கொண்டிருந்தது. நூற்றுக்குத் தொண்ணூற்றேழு சதவிகிதமான பார்ப்பனர் அல்லாத மக்கள் -_ மண்ணுக்குரிய மக்கள் கை பிசைந்து நின்றனர்.
எடுத்துக்காட்டாக ஒரு புள்ளி விவரம் (1912) நூற்றுக்கு மூன்று பேர்களாக இருந்த பார்ப்பனர்கள் டிப்டி கலெக்டர்களில் 55% சப் ஜட்ஜ்களில் 83%
மாவட்ட முன்சீப்புகளில் 72% என்ற நிலை.
அதே ஆண்டில் சென்னை மாநில சட்ட மன்றத்தில் இடம் பெற்றிருந்தவர்கள் யார் யார் தெரியுமா?
உள்ளாட்சித் துறைகளிலிருந்து வந்தவர்கள்
(1) தென் ஆர்க்காடு - செங்கற்பட்டுத் தொகுதி _ வழக்கறிஞர் ஆர். சீனிவாச அய்யங்கார்.
(2) தஞ்சாவூர் _ திருச்சிராப்பள்ளி தொகுதி _ வி.கே.
இராமானுஜ ஆச்சாரியார்
(3) மதுரை இராமநாதபுரம் தொகுதி _ கே.
இராமையங்கார்.
(4) கோவை _ நீலகிரி தொகுதி _ சி.
வெங்கட்ரமண அய்யங்கார்.
(5) சேலம் _ வடாற்காடு தொகுதி _ பி.வி.
நரசிம்மய்யர்
(6) சென்னை நகரம் _ சி.பி.
இராமசாமி அய்யர்
டில்லி மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் எம்.கே.ஆச்சாரியார்! சென்னை: திவான் பகதூர் டி.
ரங்காச்சாரி.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். சுப்பிரமணிய அய்யர்! வி.
கிருஷ்ண சாமி அய்யர், டி.வி.
சேஷகிரி அய்யர், பி.ஆர்.
சுந்தரம் அய்யர்.
அந்தக் காலத்தில் கல்லூரிகள் சென்னை போன்ற இடங்களில்தான். வெளியூர்களிலிருந்து சென்னைக்குப் படிக்கவரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களுடையது. பார்ப்பனர் அல்லாதாருக்கு அங்கு இடம் கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வரலாம். அங்கு தங்கி உணவருந்த முடியாது என்ற கொடுமை.
அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் தங்கிப் படிக்க சென்னையில் விடுதி ஒன்றை ஒருவர்
(டாக்டர் சி.
நடேசனார்) ஏற்படுத்தினார் என்றால் அது என்ன சாதாரணமானதுதானா? பாலைவனத்தில் கிடைக்கப்பெற்ற சோலையல்லவா!
பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உள்பட எல்லா நிலைகளிலும் உரிய இடம் பெற்றாக வேண்டும் என்று கருதியது காலத்தின் கட்டாயம் தானே!
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி,
ஆசிரியர் “ கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி,
ஆசிரியர் “ கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக