ஞாயிறு, 16 ஜூலை, 2017

அரிவாளைத் தூக்கிக் காட்டி தாம்பிராஸ் மாநாட்டில் பார்ப்பன வெறிக் கூச்சல்!


தமிழ்நாடு ‘பிராமணர்’ சங்கம் வெள்ளிவிழா மாநாடு சென்னை அண்ணா நகரில் டி.கே. ரெங்கநாத அய்யர் நகர் - ஸ்ரீ கிருஷ்ணா கார்டனில் டிசம்பர் 24, 25 (2005) ஆகிய இரு நாள்களிலும் பெரும் பணச்செலவில் நடைபெற்றுள்ளது.

இந்த மாநாட்டின் நடவடிக்கைகள் பார்ப்பனர்களைப் பொறுத்த வரை என்ன லாபம் என்பதை விட, 2005-ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்கள் ஆரியர்களாகவே இருக்கிறார்கள்; இந்தச் சமூகத்தில் கரைந்து போகத் தயாராக இல்லை ‘நான் பிராமணன்’ என்கிற ஜாதி ஆவணத்தின் உச்சாணியில்தான் ஆட்டம் போடுகிறார்கள் என்பதை வெகு எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆரியர் - திராவிடர் பேசுவது தேவையில்லை. பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்று பிரித்துப் பேசுவது அனாவசியம் என்று சொல்பவர்கள்கூட மனம் திருந்தி, ஆரியர் - திராவிடர் வேறுபாடு, பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் வேறுபாடு பச்சையானது என்பதைப் பச்சையாகவே ஒப்புக் கொள்வார்கள்.

இதோ அந்தப் பார்ப்பனர் சங்க மாநாட்டில் பேசியவர்களின் உரையிலிருந்து சில துளிகள்:

மணிகண்டன் (பட்டிமன்றத்தில் பேசியவர்)

நாம் இன்று ஒன்று கூடி விட்டோம். நான் இத்தனை காலமாக எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றுதான் எனக்காக பேசுகிறேன்.

இங்கு கூடியிருந்த கூட்டத்தில் பெருமையோடு கூறுகிறேன். நான் ஒரு பார்ப்பான் என்று தமிழ்நாட்டை பார்த்து நாங்கள் இன்று எச்சரிக்கை செய்கிறோம்.

2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான்  நிர்ணயிப்பார்கள்.

நம்மைப் பார்த்தாலே எல்லாரும்  பயப்படணும்.

நாம் நம்முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல்  மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும்.

எவனாவது கோயில் புரோகிதன், குருக்கள் பணம் கேட்கிறான் என்று வெளியே வந்து சொன்னால் கூட்டம் கூட்டமாக வந்து கைவைங்கடா. நான் அப்படித்தான் சொல்வேன் கைவைங்கடா! தமிழ்நாடே இனிமேல் நம் பக்கம் திரும்ப வேண்டும்.

எச். ராஜா எம்.எல்.ஏ., (பா.ஜ.க.)

அமெரிக்காவுல வாஷிங்டன் கூட இதுமாதிரி கூட்டம் போட முடியும். அது பிராமினால மட்டும்தான்.

சுர்வேதனா சுகினுபவ
லோகா சம°தா சுகினுபவ

விளக்கம்:- உலகிலுள்ள அனைவரும் சுகமாக இருக்க வேண்டும்.
திருக்கோஷ்டியூர் தலபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இராமானுஜ ஆச்சாரியார் தங்களுடைய செய்தி மூலம் அனைவரும் உலகில் ஆண்டவன் குழந்தைகள் என்றார்கள்.

மங்கள்பாண்டே இல்லையெனில் முதல் சுதந்திரப்போர் ஏது?

மாற்றங்களை நமதாக்கிக் கொள்ள வேண்டும். நாம் கும்பிடுகிற தெய்வத்தை நிந்திக்கிறவர்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் நம் பக்தியிலே குறையிருக்கிறது என்று அர்த்தம். எதற்கு பொறுத்திருக்க வேண்டும்?

இத்தனைக் கோடி மக்கள் இருக்கும் இந்தியாவிலே இந்துக்களை மட்டும் நிந்திக்கக் காரணம் என்ன? நாம் வீரத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டோம். ‘ரவுத்திரம் பழகு’கோபத்தின் ரூபமாக இருப்பவனே எனக்கு கோபத்தைக் கொடு. ஒவ்வொருவருக்கும் தனி பழக்கமுண்டு. அதை எதிர்க்க நீ யார் பகுத்தறிவுவாதி? ராமகிருஷ்ண பரமஹம்சர் தவமிருந்து ஆண்டவனைப் பார்த்தார். ஆனால் நீயோ அதெல்லாம் செய்ய மாட்டேன் என்று சொல்லி ஆண்டவன் எங்கே என்று கேட்டால் என்ன அர்த்தம்? இதையெல்லாம் நாம் கேட்க தவறிவிட்டோம்.

பாரதிக்கு தாசன்கள் மட்டுமே வர முடியும். ஆனால் பாரதி வர முடியாது. பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே, என்று சொன்ன பாரதி அரிஜன சகோதரர்களுக்கு பூணூலும் போட்டாரா இல்லையா - பாரதியை போன்ற புரட்சிவாதி இருக்க முடியுமா?

காஞ்சி பெரியவர் கைதானபோது மடிசார் கட்டிய நம் பெண்கள் வீதியில் (நங்கநல்லூர்) வந்து அமர்ந்ததைக் கண்டு ‘ரவுத்திரம் பழகு’ என்பதைத் தெரிந்து கொண்டேன்.

அதிகார வர்க்கத்திற்குப் போக வேண்டாமென எண்ணுவது

அதிகார வர்க்கத்திற்கு கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய துறை ஊiஎடை ளுநசஎiஉநள னுடிஉவடிசள வரட்டும் நுபேiநேநசள வரட்டும். சுநயட நுளவயவந க்ஷரளiநேளள ஆரம்பித்து வைத்தது நம் பிராமண சமுதாய இளைஞர்கள்; இன்னும் கொஞ்ச நாள் போனால் நம்ம ஆள் பஞ்சாயத்தும் செய்ய ஆரம்பிச்சிடுவான்.

இரா. அன்பழகன் (மீனவர் சமூகப் பிரமுகர்)

ஜாதி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்பட்டு அந்தப் பழியை பிராமணர்கள்மீது போடுவது ஆதிகாலத்திலிருந்து இருந்து வருகிறது. சாதனை செய்வது உங்கள் உடன் பிறந்தது. இரத்தத்துடன் கலந்தது. ஆன்மீகத்தைத் தாங்கி நிற்கின்ற பிராமணர்க்கு தலைவணங்க வேண்டும்.

படத்தயாரிப்பாளர் பிரமிட் நடராசன்:

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பான அடின்னு சொன்னானே இனி சொல்லுவானா? பாப்பாத்திய தேசிய மயமா ஆக்குவோம்னானே இப்ப சொல்லுவியாடா? இனி சொன்னான்னா வெட்டுவோம். நம் பெண்களே வெட்டுவாங்க.

நடிகர் டெல்லி கணேஷ்

நாமெல்லாம் உதாரணப் புருஷர்கள்.
நாசாவில் ராக்கெட் பறப்பதற்கு நாம்தான் காரணம்.
பிராமண இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.
ஒரே மனித இனமா வாழ்ந்துவிடலாம் என்று பார்த்தோம். முடியவில்லை.  இப்போ ஜாதி ரீதியாகத்தான் வாழமுடியுது.

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா அது ஒரு சுலோகம்.
பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா. இது நம்ம சுலோகம்.
அடிக்கு பயந்தவன் பிராமணனல்ல. நீ என்ன பண்ணினாலும் பார்த்துட்டு இருக்கோம் என்று அர்த்தமில்லை. ஓரளவு பயம் தெளிஞ்சு போச்சு.
இந்த ஜாதின்னா இப்படித்தான் இருக்கும். அவங்ககிட்ட இருக்கிற ஒற்றுமை வேறு யாருக்கும் கிடையாது.

சரஸ்வதி ராமநாதன்

நமது பலம் நாம் காலகாலமாக கடைபிடித்து வரும் கோவிந்தமும், கீதையும், கோமாதாவும்தான்.

ஓசியில்  10 சதவீதம் பிராமண குழந்தைகள் வரவேண்டும். மத்தவர்களை விட நாம் உசத்தியா இருக்கோம்.

பெண்கள்தான் நமது கலாசாரத்தை காப்பாற்றுகிறார்கள்.

சிலபேர் மாநாடு போட்டா ப°சை செக் பண்ண வேண்டியிருக்கு. சட்டைக்குள்ள அரிவாள் °டாண்ட் அந்த அரிவாளுக்கு இல்லாத பலம் நம்ம நாக்கில் இருக்கிற மந்திரத்தில் இருக்கு.

புதுக்கோட்டைக்கு பக்கத்தில் காந்தி நகர். காந்தி நகர் என்றாலே யாருக்காக ஒதுக்கப்பட்டது என்று தெரியும். அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கலப்பு மணங்கள் நமது கலாசாரத்தை சீரழிக்கிறது.

பிராமின் என்று ஒரு கலாசாரம் இருந்தால் போதும், உட்பிரிவுகள் கூட தேவையில்லை என்று ஆச்சார்ய °வாமிகள் கூறியிருக்கிறார்.

சுஜாதா

நம்முடைய எண்ணிக்கை என்ன?

நம்மை அவர்கள் தமிழர்கள் அல்லர் என்கிறார்கள், நமக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன் (கைதட்டல்) நாம் எதற்கும் பயப்படக்கூடாது. அண்மைக் காலத்தில் சில பிரச்சினைகளெல்லாம் வந்தன. அவற்றை நாம் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும்.

சினிமா இயக்குநர் பாலசந்தர்

இவ்வளவு பெரிய கூட்டத்தில் நானும் ஒருவன் என்கிறபோது எனக்கு மிகப் பெருமையாக உள்ளது. இவ்வளவு காலம் நான் கூட ஒதுக்கியிருந்துவிட்டேன். நம்முடைய சாதனைகளை கூறுவதற்கே அன்பழகனார் அவர்களும் சாலமன் பாப்பையாவும் தேவைப்படுகிறார்களே என்பதுதான் வெட்கமாக இருக்கிறது.
அவர்கள் வந்து கூறுவதுதான் நமக்கு பெருமையாக உள்ளது. இதுதான் இந்த மாநாட்டின் வெற்றியே!

இந்த மாநாட்டில் எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர் பாலசந்தர் போன்ற பார்ப்பனர்கள் நேரிடையாகப் பங்கு கொண்டு பார்ப்பனர்களின் பிரதாபத்தை ஓங்கி ஒலித்துள்ளனர். இவர்கள் எல்லாம் பார்ப்பனர் சார்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சில அப்பாவித்தனமாக நம்பித் தொலைத்திருக்கலாம்.

அப்படிப் பொதுவாக நம்பப்பட்டவர்களே பார்ப்பனத்தனத்துடன் பார்ப்பன மாநாட்டின் மேடைமீது ஏறி முழங்கியதிலிருந்தே இவ்வளவு காலமாக நாம் நினைத்திருந்ததெல்லாம் நீர்த்துளியாகி விட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள்.

லவுகீக பார்ப்பானாக இருந்தாலும், வைதீக பார்ப்பானாக இருந்தாலும்,  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பார்ப்பனர் வெறி என்பது அவர்களின் ரத்த ஓட்டமாக இருக்கிறது என்பதற்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்?

மாநாட்டில் பார்ப்பனர் சிலர் அரிவாளைச் சுழற்றிக் காண்பித்துள்ளனர்.  இதன் பொருள் வெளிப்படையானது, ஆயுதம் ஏந்தத் தயாராகி விட்டார்கள் - வன்முறையால் உந்தப்பட்டுள்ளார்கள் என்பது புரிந்துவிட்டது. இதனைத் தமிழுணர்வாளர்கள் கண்டு கொள்வார்களாக!

விபீஷணர் படலம் இல்லாமல் இராமாயணம் நிறைவு பெறுமா?

மாநாட்டில் பேச்சு வியாபாரி சாலமன் பாப்பையா பங்கு கொண்டு பார்ப்பனர்களை தலையில் தூக்கி வைத்து சதிராட்டம் போட்டு இருக்கிறார். அவாள் இல்லாமல் தமிழ் ஏது என்று அவாள் மெச்ச இச்சகம் பேசி ஆழ்வார்ப்பட்டம் பெற்றுவிட்டார். தகுந்த கூலியும் பெற்று இருப்பார் - பேச்சு வியாபாரி அல்லவா!

பார்ப்பனர்களைப் பார்த்து உங்கள் தாய்மொழி தமிழ் என்று சொல்லுங்கள் என்று ஒரு தந்திரத்தையும் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார்.

யாரோ அன்பழகனாம் - மீனவர் சமூகப் பிரமுகராம்! சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் பிறந்து, பார்ப்பனீயத்தை அக்குவேர் ஆணிவேராக அலசி எடுத்தவர். அந்தச் சமுதாயத்தினரே இத்தகையவர்கள்! நீங்கள்தானே எங்களுக்குக் கல்வியைக் கொடுத்தவர்கள் என்று பேசி இருக்கிறார். ஓநாய்கள்தான் புள்ளி மான்களுக்குப் பிரசவம் பார்த்தன என்று சொன்னாலும் நம்ப வேண்டியதுதான் போலும்.

இந்த இருவரைப்பற்றி அய்ஸ் மழை ஏராளம் பொழியப்பட்டுள்ளது. அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்த பிறகு விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டம் கிடைத்தது! அதை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

தந்தை பெரியார் மிகவும் நொந்துபோய் சொன்னார் “இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் ‘விபீஷணப் பரம்பரை’ வளர்ந்து வருவதுதான்?” என்று எழுதினார் (தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969)

அதைத்தான் இப்பொழுது நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

மாநாட்டில் பார்ப்பனர்கள் வெளியிட்ட துண்டறிக்கை ஒன்றில் ‘பிராமணர் சங்கம் எதற்காக?’ என்பதற்கு விளக்கங்கள் கொடுத்துள்ளனர். 14 நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதனைப் படித்துப் பார்த்தால் பார்ப்பனர்களின் மனோபாவம் என்ன என்பது விளங்கிவிடும்.

ஹிந்து தர்மத்தின் அடித்தளமாக இருக்கக் கூடிய பிராமணர்கள் நமது தர்மம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவைகளை முறையாகக் டைபிடித்து காப்பாற்ற உதவி புரிதல் என்பது வரிசை எண் நான்கில் கூறப்பட்டு இருப்பதாகும்.

ஹிந்து தர்மத்தின் அடித்தளம் அவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் அடிப்படை என்றால் மற்றவர்களின் கெதி என்ன? அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர்? நாலாம் ஜாதியாக வைக்கப்பட்டுள் ளனர் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள்.

அவர்கள் தர்மம் என்பது சுதர்மம் (வருணாசிரம தர்மம்) தானே. அதனைக் காப்பாற்றுவதுதான் அவர்களின் நோக்கம் என்று வெளிப்படையாக அச்சிட்டுக் கொடுத்துவிட்டனர்.

நாலாம் ஜாதியாக சூத்திரர்களாக, பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாக இந்நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கட்டிப் போடுவதற்கு இந்த மாநாட்டினைக் கூட்டியுள்ளனர் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

சம°கிருத மொழி அறிவு ஏற்படவும், வேதாப்பியாசம் பெறவும், நீதி நெறிகளைப் போதிக்கவும், °லோகங்கள் கற்பதற்கும், வகுப்புகள் கருத்தரங்குகள் நடத்துதல் என்பது அவாளின் எட்டாவது குறிக்கோளாம்.

செத்துச் சுண்ணாம்பாகிப் போனாலும் சம°கிருதத்தின்மீது அவர்களுக்கு இருப்பது இரத்தவெறி என்பது வெளிப்படை!

திராவிடர் வேறு, ஆரியர் வேறு என்று 80 ஆண்டு காலமாக தன்மான இயக்கம் கூறி வருகிறது; தந்தை பெரியார் பட்டிதொட்டியெல்லாம் பறைசாற்றி வந்தார்.
அவர்களுக்கு நெருக்கடி வந்தபோது ஆரியராவது - திராவிடராவது! பார்ப்பனராவது - பார்ப்பனர் அல்லாதவராவது! அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. எல்லாம் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று கூறிவந்த அதே பார்ப்பனர்கள்தாம் - பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி தாங்கள் ஆரியர்களே என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தி விட்டனர்.

இதன் மூலம் நமது பணி இலகுவாக்கிக் கொடுக்கப்பட்டு விட்டது. நாம் இதுகாறும் சொல்லி வந்த கருத்துகள் நூற்றுக்கு நூறு சரியானவைதான் என்பதைப் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி பறையடித்துத் தெரிவித்து விட்டனர். அதற்காக அவர்களைப் ‘பாராட்டலாம்’ என்றே தோன்றுகிறது.

பார்ப்பனர் சங்கம் என்றாலும், இந்து முன்னணி என்றாலும், பஜ்ரங்கதள் என்றாலும், விசுவ இந்து பரிஷத் என்றாலும் எல்லாம் ஒன்றுதான். சரக்கு ஒன்று ‘லேபிள்’ வேறு என்று கூறி வந்தோம் - அதுவும் உண்மைதான் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

‘அந்தணர் முரசு’ என்று ஓர் இதழ் திருச்சி புத்தூர் அக்ரஹாரத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதன் டிசம்பர் 24, 25 இதழில் வெளிவந்துள்ள எது மதச்சார்பின்மை? எது வகுப்புவாதம்? என்று வெளியிட்டுள்ள 20 கேள்விகள், ஆர்.எ°.எ°., இந்து முன்னணி போன்ற சங்பரிவார்கள் கூறி வந்தவைகளின் அசல் நகலாக்கமாகும். ஹிந்து மக்கள்மீது குடும்பக் கட்டுப்பாட்டைத் திணிக்கிறார்கள் - மு°லிம்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று குற்றப் பத்திரிகை படிப்பதிலிருந்து அனைத்துமே ஆர்.எ°.எஸின் பதிப்புதான்.

ஒட்டு மொத்தமாக இவை எல்லாவற்றையுமே ஒரே கட்டாகக் கட்டி தமிழர்கள் ஒரே பார்வையில் அக்னிப் பார்வையில் புயல் வேகத்தில் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

ஆரியர் - திராவிடர் போராட்டத்தைத் தோள் தட்டித் தொடங்கிவிட்டனர் பார்ப்பனர்கள். அனேகமாகப் போர்ச் சங்கும் ஊதி விட்டார்கள். அரிவாளைத் தூக்கிவிட்டனர்; ஆரியர்கள் வன்முறை நெருப்பையும் கக்கிவிட்டனர்.

இந்த வன்முறை நடவடிக்கைகள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது. இது எங்குக் கொண்டுபோய் விடுமோ யாருக்குத் தெரியும்?

வாள் ஏந்த பார்ப்பனர்கள் தயாராகும்போது பாதுகாப்பு நோக்கத்தோடாவது தமிழர்கள் தற்காப்புப் பயிற்சி பெற்றிருக்க வேண்டாமா?

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக