திங்கள், 17 ஜூலை, 2017

இரட்டையர்கள்


உலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் . இராமசாமி (முதலியார்) . இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பிடவோ, இணையாகவோ கூறிட முடியாது.

1887 ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 14) பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் (.ஆர். முதலியார்) அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் .எல். முதலியார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராகவிருந்து வெள்ளி விழா கண்ட தங்கமனிதர் .எல். முதலியார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல் கலைக் கழகம் இந்த இரட் டையர் இருவருக்குமே டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியது என்றால், இது என்ன சாதாரணமா! அய்தராபாத் பிரச்சினை தொடர்பாக அய்.நா. மன்றம் சென்றது மட்டுமல்ல - வென்றும் வந்தார் .ஆர். முதலியார் என்பது சரித்திரம்.

இவர்களின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் வெகு நேர்த்தியுடனும், பெருமையுடனும் கொண்டாடியது (19.1.1988).

நீதிக்கட்சி நடத்திய ஜஸ்டிஸ் இதழின் கவுரவ ஆசிரியராக இருந்து (1927-35) .ஆர். முதலியார் எழுதிய தலையங்கங்கள் புகழ்பெற்றவை. அவற்றைத் தொகுத்து (ஆசைசடிச டிக வாந லுநயச) நூற்றாண்டு விழா வின்போது வெளியிட்டது திராவிடர் கழகமாகும்.

இரட்டையர்கள் பற்றிய நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்ட கடமையைத் திராவிடர் கழகம் வரலாற்றில் ஆற்றியுள்ளது.

அம்மலரின் முகவுரையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்- இவர்கள் மட்டும் பார்ப்பனக் குலத்திலே பிறந்திருந்தால் திருஞான சம்பந்தனுக்குப் பார்வதி தேவியார் ஞானப்பால் கொடுத்ததாகக் கதை கட்டியதுபோல, புதிய சரடு ஒன்றைக் கிளப்பிப் புராணம் எழுதியிருப்பார்கள் என்று எழுதியுள்ளார்.

1917 இல் .ஆர். முதலியார் நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
அய்க்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகக் கழகத்தின் முதல் தலைவர் இவரே (1946) 1947 ஆம் ஆண்டுக்கு மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

.எல். முதலியார் தமிழ் நாடு சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். யுனெஸ்கோவின் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தார்.

இரட்டையர்கள் இரு வரும் தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். தந்தை பெரியாரை மிகவும் மதித்தவர்கள் - தமிழ்நாட்டின் ரூசோ என்று தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிட்டவர் .ஆர். முதலியார் ஆவார்.

வாழ்க ஆர்க்காடு இரட்டையர்கள்!

14.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக