அயோத்தியிலிருந்து ராமனின் பாதுகை தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது. பாதுகை என்றால் பெரிய சிம்மாசனம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நல்ல தமிழில் கூற வேண்டுமானால், செருப்பு.
திண்டிவனம் அருகே பஞ்சவடியில் பஞ்சமுக ஸ்ரீ ஜெய மாருதி சேவா அறக்கட்டளையின் சார்பில் ஆஞ்ச நேயர் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்தக் குரங்குக் கோயிலின் சார்பில் ராமனுக்குத் தங்கத்தால் செருப்புச் செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள
48 கோயில் ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அயோத்திக்கும் எடுத்துச் சென்று திருப்பதி வழியாகச் சென்னைக்கு நேற்று (29.9.2004) கொண்டு வரப்பட்டுள்ளது. சென்ற இடங்களில் எல்லாம் இந்தச் செருப்புக்கு வரவேற்பாம்
வழிபாடாம்!
உலக அமைதிக்காகத் தான் இந்த ராமனின் செருப்பு ஊர்வலமாம். இந்தக் கதையை எங்கே போய்ச் சொல்லுவது?
ராமனின் பெயரைச் சொல்லித்தான் நாட்டில் மதக் கலவரமே தூண்டப்பட்டது
தூண்டப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
இராமாயணப்படியே இராமன் ஒரு கொலைகாரன்தான். அமைதியாக ஒரு காட்டில் தலைகீழாகத் தொங்கித் தவம் செய்துகொண்டிருந்த `சூத்திரன் சம்புகனைக் கொன்ற மகாபாதகன்தான் ராமன்!
இந்த லட்சணத்தில் அவன் பாதுகையைத் தங்கத்தால் செய்து ஊருக்கு ஊர் கொண்டு போகிறார்களாம்! இதனால் நாட்டில் அமைதி அப்படியே தாண்டவமாடுமாம்!!
செருப்பு என்றால், அவ மானம் என்று கருதுகிற மனப்பான்மை பொதுவாக உண்டு. அதே செருப்பைப் பக்தியின் பெயரால் அறிமுகப்படுத்தி மக்களை வழிபடச் செய்து, மூளையை மழுங்கடிக்கும் சாமர்த்தியத்தைப் பார்க்கவேண்டும்.
கடவுளை வணங்குகிற வன் ``காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் சொன்னால், தாண்டிக் குதிக்கிறவர்கள் இதற்கு இப்பொழுது என்ன சமாதானம் சொல்லப்போகி றார்கள்?
பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும் இதுவும் தந்தை பெரியார் கூற்றே!
31.9.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக