சபரிமலைக்
கூட்டத்தின் ரகசியம்!
“மண்டல
பூஜை, மகர சங்கிரமம் மற்றும்
விஷு விழாக்களின் போது, அனைத்து வயது
பெண்களும் தரிசனம் பெறுவதற்காக சபரிமலைக்குச்
செல்கிறார்கள் என்பது இந்த போர்டின்
கவனத்துக்கு வந்துள்ளது. மரபு முறை வந்த
பழக்க வழக்கங்களின்படி, பத்து வயதிலிருந்து அய்ம்பது
வயது வரையில் உள்ள பெண்கள்,
புதிதாகப் படிகளின் வழியாகவோ அல்லது வேறு எந்த
வழியாகவோ கோயிலுக்குள் நுழையக்கூடாது. விழாக் காலங்களில் இத்தகைய
பெண்கள் நுழையக்கூடாது. விழாக் காலங்களில் இத்தகைய
பெண்கள் வருகை தருவது, கட்டுப்படுத்த
முடியாத கூட்டங்களைக் கவர்ந்திழுக்கிறது என்பதுடன், கோவிலின் புனிதத்தையும் கெடுக்க முனைகிறது. எனவே,
மேற்குறித்த விழாக்காலங்களில் பத்து வயதுக்கும் மேற்பட்ட
பெண்கள் சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு இந்தப் போர்டினால் விரும்பி
வேண்டப்படுகிறார்கள். முடிவினைச் செயல்படுத்த எல்லா யாத்திரிகர்களின் ஒத்துழைப்பையும்
இந்த போர்டு வேண்டுகிறது.”
- தேவஸ்தான
கமிஷனர், திருவனந்தபுரம், 5.12.1975.
இப்படி
ஓர் அறிவிப்பு தேவஸ்தான கமிஷனராலே அறிவிக்கப்பட்டு 11.12.1975 ‘தினமணி’யிலே வெளிவந்துள்ளது.
பெண்கள் எல்லாம் கூடுகிறது வண்டாட்டம்;
அதனால் குமரர்களுக்கல்லவோ கொண்டாட்டம்! கட்டுப்படுத்த முடியாத கூட்டங்களைக் கவர்ந்திழுக்கிறதாம்.
எது? அங்குக் கூடுகிற பெண்கள்!
பக்தர்களே, பக்தர்களே! நோன்பு, விரதம் என்று
எத்தனை நாளைக்கு ஊரை ஏமாற்ற முடியும்?
உங்கள் யோக்கியதையைத் தோலை உரித்து உப்புப்
போட்டுக் காட்டிவிட்டாரே தேவஸ்தான கமிஷனர்.
பக்தி என்பது பகல் வேஷம்;
ஊரை ஏமாற்றுவது என்று நாங்கள் சொன்னால்,
சீறிப் பாய்ந்திடும் பக்தர்களே! தேவஸ்தான கமிஷனரே, நீங்கள் எதற்காகக் கூடுகிறீர்கள்
என்பதைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்து என்கிறாரே,
அதன் அர்த்தம் புரிகிறதா?
பெரியார்
சொன்னால் உங்களுக்குக் கோபம் வரும். ‘கோயில்
விபச்சாரிகளின் விடுதி’ என்ற பக்திமான்
காந்தி சொன்னாரே - அதை இப்போதாவது ஒப்புக்கொண்டால்
சரி!
பிராந்தி விற்பனை செய்த அய்யப்ப பக்தர்!
சென்னை
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சேகர் என்ற ஜெயராமன்
(வயது 29). இவர் அய்யப்பன் கோயிலுக்குப்
போவதற்கு மாலைகள் அணிந்து, கருப்பு
வேட்டியும் கட்டி இருந்தார். இவர்,
நான்கு பாட்டில் பிராந்தியை வைத்து விற்பனை செய்து
இருந்தாராம்.
இதையொட்டி
திருவல்லிக்கேணி போலீசார் அவரைக் கைது செய்தார்கள்.
சைதாப்பேட்டை 14-வது மெட்ரோபாலிடன் மாஜி°திரேட் கோர்ட்டில் வாலிபர்
ஆஜர்படுத்தப்பட்டு 15-நாள் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- ‘தினகரன்’
7.12.1978
(நூல்
- அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக