சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும் இருக்க மாட்டானா? என்று கேட்கின்றேன். பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா? என்று கேட்கின்றேன். சாமிகளின் பேரால் நடைபெறும் வீண் செலவுகள் ஒழிக்கப்படுமா? என்று கேட்கிறேன். இன்றைய தினம் ஜாதிகளின் பேரால் இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத்துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும், பாடுபடாமல் இருந்து கொண்டு குடும்பத்தோடு மேன்மையாய் வாழுபவனும் இருக்க மாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன் என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய்விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்?
- குடிஅரசு, சொற்பொழிவு, 06.09.1937
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக