""பிராமணரல்லாதாரியக்கம் உத்தியோகத்திற்கு ஏற்பட்டது என்று எண்ணி கவலை இல்லாமல் இருந்து விட்டோம். அது குடிஅரசு இயக்கத்தில் சேர்ந்து கொண்டு (சுயமரியாதை) உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்கு என்று சொல்லிக் கொண்டு மத வியத்திலும் கோவில் வியத்திலும் புகுந்து நம்மை அடியோடு கவிழ்க்க ஆரம்பித்து ஆயிரக்கணக்கான வருங்களாய் நாம் (பிராமணர்கள்) அனுபவித்து வந்த உரிமையை இப்போது பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாய், சுயமரியாதைக்காரர்கள் செய்து வரும் பிரச்சாரத்தின் கொடுமை ஊர்ஊராக சுற்றிப் பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும்'' என்பதாகச் சொல்லி இருக்கின்றார்.
இந்த வாக்கியங்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் உண்மையும் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமும் விளங்காமல் போகாது. வெறும் உத்தியோகத்தைப் பற்றி பார்ப்பனரல்லாதார் இயக்கம் பாடுபடுவதாக பார்ப்பனர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இதைப் பற்றி ஒரு சிறிதும் கவலை இருக்க நியாயமில்லை. ஏனெனில் எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் சர்க்கார் உத்தியோகங்களிலிருந்து பார்ப்பனர்களை சுலபத்தில் விரட்டிவிட முடியாது. ஏன் எனில் வெள்ளைக்காரர்களிடமிருந்து உத்தியோகம் பெறும் யோக்கியதையும், சவுகரியமும் அவைகளுக்கேற்றபடி நடக்கும் தன்மையும் பார்ப்பனரல்லதார் களுக்கு இல்லை என்பது பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரிந்த வியம். அன்றியும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் எதிர்பிரச்சாரம் செய்ய பார்ப்பனரல்லாத பல கூலிகள் தங்களுக்குச் சுலபமாய் கிடைப்பார்கள் என்கின்ற தைரியமும் இருந்தது. ஆதலால் அவர்கள் இதை லட்சியம் செய்யவில்லை. ஆனால் இப்போது சுயமரியாதை இயக்கமானது பார்ப்பன சூழ்ச்சிகள் பலிக்க விடாமல் செய்வதோடு பார்ப்பனரல்லாத கூலிகளும் பார்ப்பனர்களோடு முன் போல அவ்வளவு தாராளமாய் சேருவதற்கில்லாமல் செய்வதால் இப்போது பார்ப்பனர்கள் பயந்து தீர வேண்டியதாய் விட்டது.
அன்றியும் சுயமரியாதைக் கொள்கைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதாரமானதும் ஆணி வேரானதுமான பார்ப்பன மதத்தையும் பார்ப்பன சாமி கோயில்களையும் கழுத்துப் பிடியாய் பிடித்துக் கொண்டதால் பார்ப்பனர்கள் திமிறுவதற்கு இடமில்லாமல் கண் பிதுங்க விழிக்கின்றார்கள். மேலும் இவ்வியக்கம் வெற்றி பெற்றது என்று சொல்லுவது, பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்காக அனுபவித்து வந்த தனி உரிமைகளைப் பிடுங்கி எல்லா மக்களையும் சமமாக்கித் தீரவேண்டியதாதலால் சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது பிராமண மகாசபையின் கடமையாகப் போய் விட்டது என்பதில் அதிசயமொன்றுமில்லை.
""கிராமங்களில் கூட இவ்வியக்கம் பரவி விட்டது'' என்று திரு ஆச்சாரியார் சொல்லுவதிலிருந்து நாம் சந்தோப்பட வேண்டியதானாலும் அது பரவ வேண்டிய அளவுக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்னும் பரவவில்லை என்பது நமது கருத்தாகும்.
தவிர உபன்யாச முடிவில் ""சுயமரியாதை இயக்கம் பிராமணத் துவே இயக்கமானதால் அவ்வியக்கத்தால் பிராமணர்களுக்குக் கெடுதி ஏற்படாமல் தடுப்பதற்காக சைமன் கமினைத் தஞ்சமடைய வேண்டும்'' என்பதாக சொல்லி இருக்கின்றார்.
தாங்கள் மாத்திரம் எவ்வளவு இழிவானது அயோக்கியத் தனமானதுமான காரியங்களைச் செய்தாலும் பிராமணர்கள் என்பதும், தங்களைத் தவிர மற்றவர்கள் எவ்வளவு யோக்கியர்களானாலும் அவர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும், தொடக் கூடாதவர்கள் என்றும் தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்றும் பல மாதிரியான இழிவான வார்த்தைகளால் அழைப்பதும் கொடுமைப்படுத்தி வதைப்பதும், துவேமாகாமல் போவதும், இம்மாதிரி செய்வது யோக்கியமானதல்ல வென்று நாம் சொல்லுவது மாத்திரம் துவேமானதுமானால் இந்த துவேம் உலக முழுமையும் ஏற்பட வேண்டும் என்றே ஆவேசப்படுவதோடு இந்த துவேமில்லாத தமிழ் மக்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்றே சொல்லுவோம்.
- குடிஅரசு, தலையங்கம், 26.08.1928
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக