என்னுடைய நாட்டு மனிதன் ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருத வேண்டும். அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான் என்னை வருத்துகின்றது. நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது. நெஞ்சம் குமுறுகின்றது.
இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப் பற்றி கவனிப்போம். அதை யொழிப்போம்.
இல்லாவிட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக்கின்றார்களோ அவற்றையொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதை விட்டு விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு "அரசியல் அரசியல்' என்றால் என்ன அர்த்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே காலத்தைக் கடத்துவது?
- குடிஅரசு, சொற்பொழிவு, 06.09.1931
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக