திங்கள், 17 ஜூலை, 2017

நோபால்




இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே முத்தரப்புக் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் தோற்று இந்தியா மூக்கறுபட்டது.
சிறீகாந்த் என்ற பார்ப் பனர் விளையாட்டு வீரர் களைத் தேர்ந்தெடுத்த லட்சணம் சிரிப்பாய் சிரிக்கிறது. பூணூல்காரரா என்று தட்டிப்பார்த்துத்தான் ஆள்களைத் தேர்ந்தெடுக்கிறார். கிரிக்கெட் என்றாலே நோகாமல் விளையாடும். பணம் காய்ச்சி மர மாயிற்றே - பார்ப்பனர்கள் குத்தகை எடுத்துக்கொண்டு விடமாட்டார்களா?

இதில் சூதாட்டம் வேறு! வெட்கக்கேட்டுக்குப் பிறந்த விவஸ்தை கெட்ட சமாச்சாரம் இது.

இந்த முத்தரப்புப் போட் டியில் ஒரு பிரச்சினை பெரியதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஷேவாக் என்பவர் (இந் திய அணி) நூறு ஓட்டம் எடுக்க வாய்ப்பு இருந்ததாம். அப்படி எடுக்கவிடாமல் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் நோபால் வீசி விட்டாராம். இதைப்பற்றி வாத - பிரதிவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

திருவாளர் சோ ராமசாமியும் - இதற்குமுன் இது போல நடந்ததைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்து பதில் சொல்லிக் கொண்டுதிரிகிறார்.

இதே இலங்கையிலே தமிழச்சிகளை சிங்கள வெறியர்கள் சீரழித்தார்களே - மருத்துவமனை என்று கூடப் பார்க்காமல் குண்டு மழையைப் பொழிந்தார்களே - சிறுவர்கள் தங்கி இருந்த விடுதியிலே வெடிகுண்டு வீசிக் கொன்று குவித்தார்களே - தமிழன் மாமிசம் இங்கு கிடைக்கும் என்று விளம்பரம் செய்தார்களே - சிறைச்சாலைக்குள்ளும் புகுந்து கொலை செய்தார்களே, முள்வேலி முகாமுக்குள் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களை அடைத்து பன்றிகளைவிடக் கேவலமாக நடத்தினார்களே - கடைசிக் கட்டப்போர் என்று 50 ஆயிரத்திற்கும் மேலான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி அழித்து முடித்தார்களே - தமிழ் மக்களின் பூர்வீக இடங்களில் சிங்களர்களைக் குடியேற்றி, தமிழர்களை நாடற்றவர் களாக ஆக்கும் அயோக்கி யத்தனத்திலே ஈடுபட்டு வருகிறார்களே, தமிழினப் பிள்ளைகளின் படிப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டனரே - இதைப்பற்றி யெல்லாம் துக்ளக்கோ பார்ப்பன ஏடுகளோ ஒருவரி கண்டித்து எழுதாததோடு மட்டுமல்லாமல், அந்த மனித விரோத கொடூரமான செயல்களை எல்லாம் நியாயப்படுத்தி பதவுரை, பொழிப்புரை எழுதிக்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு நோபால் போட்டு ஷேவாக்கின் நூறு ஓட்டத்தைப் பறித்துவிட்டாராம் இலங்கை ஆட்டக்காரர் - அதற்காக அடேயப்பா, அண்டத்தையே கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள் - பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

31.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக