ஞாயிறு, 16 ஜூலை, 2017

கோயில் விபச்சார விடுதியே!


குஜராத் மாநிலம் தபோய் என்ற பகுதியிலுள்ள வட்தால் சுவாமி நாராயன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் சாமியார்களான சந்த், தேவ் வல்லப் ஆகியோர் வரம்பு மீறி நடப்பதாக கோயில் நிருவாகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்திருக்கின்றன. அதுவும் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே இந்தக் கூத்துகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், சாமியார்களைப் பிடிக்காத சிலர்தான் இப்படி பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று கோயில் நிருவாகம் மறுத்து வந்தது.

இதையடுத்து சாமியார்கள் பெண்களுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படமெடுத்து ஆதாரத்துடன் வெளியிடுவது என்ற முடிவுக்கு எதிர்த்தரப்பினர் வந்திருக்கின்றனர்.அடுத்த கட்டமாக மினியேச்சர் வீடியோ காமிரா ஒன்று சாமியார்களின் குடிலுக்குள் பொருத்தப்பட்டது. இதையறியாத சாமியார்கள் வழக்கம்போல அறைக்குள்ளே பாலியல் கூத்தடிக்க அது அப்படியே வீடியோவில் பதிவாகிவிட்டது.

வீடியோவில் பதிவான காட்சிகளை வி.சி.டி.யாக மாற்றம் செய்த எதிர்த்தரப்பினர் அதை குஜராத்தின் பிரபல பத்திரிகையான சந்தேஷுக்கு அனுப்பி விட்டனர்.

அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அனைவரின் முகங்களும் தெள்ளத் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன.

ஒரு பெண் அமர்ந்திருக்கும் காட்சி வீடியோவில் முதலாவதாக இடம் பெற்றிருக்கிறது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்தப் பெண்ணின் பெயர் ரூபல்.

அடுத்து வெள்ளை பைஜாமா அணிந்த கோயிலின் பணியாளர் ஒருவர் பாய் மற்றும் தலையணையை அந்த அறையினுள் விரித்து விட்டுச் செல்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தலையில் குடுமி, நெற்றியில் நாமம், கழுத்தில் ருத்திராட்சம், மார்பில் பூணூல், இடுப்பில் காவி சகிதமாகத் தோற்றமளிக்கும் சாமியார் தேவ் வல்லப் அந்த அறையினுள் நுழைகிறார். அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை தேவ் மெல்ல அணைக்க, அந்தப் பெண்ணோ, விளக்கை  அணைக்க வேண்டாம் ப்ளீஸ்.... அது எரியட்டும் என்று தடுக்க மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது.

பின்னர் ரூபலை நெருங்கும் சாமியார், அவரது ஆடைகளைக் களைகிறார். வேண்டாமே என்று மறுக்கும் ரூபலை தனது வாயில் விரலை வைத்தபடி மூச் என எச்சரித்து, காரியமே கண்ணாக சாமியார் இயங்க ஆரம்பிக்கிறார். முரட்டுத்தனமாக தேவ் வல்லப் படர்ந்துகொள்ள, வேறு வழியின்றி அந்தப் பெண்ணே தனது உடைகளைக் களைகிறார். தேவ் வல்லப் தன்னுடைய இச்சையைத் தணித்துவிட்டு வெளியேற, அடுத்த விளையாட்டைத் தொடர சாமியர் சந்த் உள்ளே நுழைகிறார். தேவ் வல்லப்பிற்கு தான் சளைத்தவனில்லை என்பதைப் போல சந்த்தும் ரூபலிடம் உடலுறவு கொள்கிறார். இந்தக் காட்சியுடன் வீடியோ முடிந்துவிடுகிறது. இந்தச் சம்பவம் நடந்தது எப்போது என்ற தெளிவான விவரம் ஏதும் தங்களுக்குச் சரிவர கிடைக்கவில்லை என்கிறது சந்தேஷ் பத்திரிகை.

இந்தச் செய்தியும், படங்களும் பத்திரிகையில் மட்டுமன்றி, சந்தேஷின் இணையதளத்திலும் வெளியாக மிகப் பெரிய அளவிலான பரபரப்பு குஜராத்தைப் பற்றிக் கொண்டது. கோயிலுக்குள் இது போன்ற கயவர்கள் இருக்கவே கூடாது என்று கொதித்துப்போன தபோய் நகரத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, சிலர் இனி இந்தக் கோயிலே தேவையில்லை என, கோயிலையும் தாக்க முற்பட்டனர். அதற்குள்ளாகவே போலீ° அங்கே வந்து அவர்களை விரட்டியடிக்கவே ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலிலிருந்து கோயில் தப்பிப் பிழைத்தது.

கோயிலினுள் காமோற்சவம் நடத்திய சாமியார்கள் இருவரும் தங்களது அந்தரங்கம் அம்பலமானதையடுத்து அங்கேயிருந்து தப்பியோடிவிட்டனர். ரூபல் என்ற அந்தப் பெண்ணும் தலைமறைவாகி விட்டார். சாமியார்கள் இருவரும் கோயிலுக்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் வேலை செய்யும் பெண்களையும் தங்களது குடிலுக்கு வரவழைத்து அனுபவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமி நாராயன் கோயிலுக்குப் பெண்களின் வரத்து கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.

இவை நடந்தது கடந்த ஆண்டு நவம்பரில் (2004). அது எப்படியோ மூடி மறைக்கப்பட்டது! எத்தனை நாளைக்கு இந்தப் பித்தலாட்டத்தை, காமக் களியாட்டத்தை மூடி மறைக்க முடியும்?

அய்ந்து மாதங்களுக்குப்பின் குட்டு உடைந்து அம்பலத்திற்கு வந்துவிட்டது. கோயில் அர்ச்சகர்கள், சாமியார்கள் கைது செய்யப்பட்டு இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

கோயில் அர்ச்சகர் பக்த சுவர்ப் கோயிலுக்கு வரும் அழகுப் பக்தைகளைக் கவர்வதில் பலே கெட்டிக்காரனாம்  பசப்பு வார்த்தைகளால் மயக்கிடும் மாயக் கண்ணனாம் அவன் வலையில் விழுந்த பெண்கள் ஏராளம் இவனுக்குச் சீடக் கோடிகள் உண்டு. மான்சக்படேல், பானுபாய் படேல், தக்கர் சின்படேல் ஆகியோர் முக்கிய சீடர்கள். சாமியார்க்குப் பக்தைகளை அனுப்பி வைக்கும் முகவர்கள் இவர்கள்.

பக்தைகளுடன் அர்ச்சகர்கள், சாமியார்கள் சல்லாபிப்பதை வீடியோ படமும் எடுப்பார்களாம். அவற்றை சி.டி.யாக்கி வியாபாரமும் இன்னொரு புறம்! கோயில்கள் என்ன வேலைக்கெல்லாம் தான் பயன்படுகிறது!

சும்மாவா சொன்னார் காந்தியார்  கோயில்களை விபச்சாரவிடுதியென்று! அவர் வாய்க்குச் சர்க்கரையைத்தான் கொட்ட வேண்டும்.

கோயிலுக்குள் அர்ச்சகர்களுக்குள் இரு கோஷ்டிகள். அதனால் ஏற்பட்ட விளைவுதான் இவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டது. இல்லாவிட்டால் இந்தச் சமாச்சாரங்கள் ஓகோ என்று கொடி கட்டிப் பறந்திருக்கும்.

அர்ச்சகர் பக்த சுவர்ப் வீட்டில் காவல்துறை நுழைந்து சோதனையிட்டபோது அடடா! கிடைத்த பொருள்கள் என்னென்ன தெரியுமா?

பக்திப் பரவசம் ஊட்டும் நூல்களா? காண்டா மணிகளா? உருத்திராட்ச மணிகளா? திருநீறா? குங்குமமா? ஜவ்வாதா? சந்தனமா? சாம்பிராணியா? சூடக் கட்டிகளா?

அல்ல... அல்ல... அவை எல்லாம் எதற்கு வேண்டும்? பக்த மடச் சாம்பிராணிகளுக்குத்- தானே இவை தேவை?

இவனோ கோயிலை காமக் கோட்டமாக்கிய காமாந்தக்காரனாயிற்றே! பகவான் வீட்டை பஞ்சணையாக்கிய பரமாத்மாவாயிற்றே! அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கொஞ்சிக் குலாவிய கோகுல கிருஷ்ணனின் குட்டிச் சீடனாயிற்றே.

அத்தகையவன் வீட்டில் என்ன கிடைக்க வேண்டுமோ அவை எல்லாம் கிடைத்தன.

ஆபாச சி.டி.க்கள், காம சூத்திரா புத்தகங்கள், நிர்வாணப் ஒளிப்படங்கள், ஆணுறைகள் (நிரோத்) கருத்தரிப்பைத் தடுக்கும் மாத்திரைகள்  இவை குவியல் குவியலாகக் கிடைத்தனவாம்  ஆண்டவன் பக்கத்தில் இருந்து அனுதினமும் பூசை நடத்தும் பூசாரியின் வீட்டில்!

அவனைப் பொறுத்த வரையில் பரமாத்மாவிடம் ஜீவாத்மாவும் ஒன்று சேர்வது இப்படித்தான். அர்ச்சகர் பக்தசுவர்ப்பைப் பொறுத்தவரை அவன் ஜீவாத்மா. அழகுப் பெண்கள் எல்லாம் பரமாத்மா. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று சேர்வதுதானே பக்தி. அதனைத் தான் அவன் நாளும் செய்து கொண்டிருந்தான் என்று சங்பரிவார் கும்பல் சொன்னாலும் சொல்லும்.

இந்த சுவாமி நாராயன் கோயிலும்  அவர்கள் (பா.ஜ.க.) ஆளும் குஜராத்தில் தானே இருக்கிறது.

பாவம், அப்பாவிப் பெண்கள் இந்த அர்ச்சகர்ப் பார்ப்பனர்களிடம் எப்படி சிக்கி இருக்கிறார்கள்? ஆண் குழந்தைகளைத் தருவதாகக் கூறினார்களாம். அவர்களும் அதற்கு ஆசைப்பட்டு அகப்பட்டுக் கொண்டார்களாம். ஆண் என்றால் அமிர்தம். பெண் என்றால் பீத்தை என்கிற மனப்பான்மை பெண்களிடமே இருக்கிறதே. இதற்காகத் தங்கள் மானத்தைக்கூட இழப்பதற்குத் தயாராகி விட்டார்களே!

சிந்தனையில் கூடுகட்டும் பிற்போக்குத்தனமான பாசிகள் எந்தக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்கின்றன என்பதுதான் இங்குக் கவனிக்கப்பட வேண்டியது.

கடவுள், பக்தி, கோயில், மதம் என்பது ஆத்மார்த்தமா ஜீவாத்மா  பரமாத்மா பிரச்சினைகளா? அவையெல்லாம் வசீகரமான வார்த்தை ஜாலங்கள் அவ்வளவுதான்!

நடைமுறையில் மனிதச் சிந்தனைக்கு விலங்கிட்டு விலங்காகவே ஆக்கும் ஒரு வகையான ஏற்பாடு அவை!

இதுவரை எந்தச் சிந்தனை எப்படி இருந்தாலும் குஜராத்தின் சுவாமி நாராயன் கோயில் சமாச்சாரங்கள் யதார்த்தங்களை பதார்த்தங்களாகத் தெரிவித்து விட்டனவா இல்லையா?

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக