``இனி அவர் செத்தாலும் சரி;
அவர் பணம் காசெல்லாம் நழுவி ``அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ்.
கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டாததாக ஆகிவிடும்! இப்படி கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணன் அவர் களைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் பாராட்டினார் (குடிஅரசு, 1.11.1944) என்றால், இதற்குமேல் கலைவாணரை யார் புகழ்ந்தாலும், அது இரண் டாம் நிலையில்தான் இருக்க முடியும்.
ஜாதி, தீண்டாமை, பக்தி, மோட்சம், நரகம், பெண்ணடிமை முதலிய மூட நம்பிக்கைகளை நாடகம், திரைப்படக் கருவிகள் வாயிலாக தோலுரித்துக் காட்டி மக்களின் மனப்பான்மையைச் செழுமைப்படுத்திய கலையுலக உழவனுக்குப் பெயர்தான் கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணன்.
அரை நூற்றாண்டு காலத்திற்குள் தன் கலைப் பணியை முடித்துவிட்டுச் சென்றது தமிழர் களுக்கு வாய்த்திட்ட வாய்ப்புக் கேடாகும்.
`யார் பையன்? திரைப்படத்திலே ஒரு காட்சி. தாழ்த்தப்பட்ட தோழர் தண்ணீர் குடித்த தம்ளர் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி தண்ணீர் ஊற்றி தீட்டுக் கழித்து எடுக்கச் சொல்லுவார் உயர் ஜாதி முதலாளி. இது ஒரு காட்சி.
அடுத்த காட்சி அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பார். அந்த நேரம் பார்த்து பணியாளராக நடித்த கலைவாணர் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து அந்த ரூபாய் நோட்டுகள்மீது ஊற்றுவார். உயர்ஜாதி முதலாளி பதறுவார் திட்டுவார்! உடனே கலைவாணர் அந்த இரு நிகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடுவார்; பார்வையாளர்கள் பக்கத்திலிருந்து கொட்டகையே அதிரும்படி கைதட்டல் வெடித்துக் கிளம்பும்; இதேபோல, எத்தனை எத்தனையோ காட்சிகள்! (இன்றைய சினிமா உலகத்தையும் நினைத்துப் பாருங்கள்).
அவருடைய மனிதநேயமோ அபரிதமானது.
விசுவாமித்திரர் என்று ஒரு படம் தயாரிக்கப்பட்டது. அது சரியாக ஓடவில்லை. பின் கலைவாணர் டி.ஏ. மதுரம் ஜோடி இணைந்த நகைச்சுவைக் காட்சி சேர்க்கப்பட்டு மீண்டும் படம் ஓடியது.
புதிதாகச் சேர்க்கப்பட்ட அந்தக் காட்சிகள் கலைவாணருக்குத் திருப்தி அளிக்கவில்லையாம். உடனே என்ன செய்தார்? படத் தயாரிப்பாளர் தனக்கு அளித்த காசோலையை திருப்பி அனுப்பி விட்டார்! என்னே மனிதநேயம்
உயர்பண்பு!
படம் ஒன்றுக்கு 20, 30 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு மக்களிடம் மூடத்தனங்களைப் பரப்புவோரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்!
குறிப்பு: இன்று கலைவாணர் மறைந்த நாள் (30.8.1957).
30.8.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
30.8.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக