நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சரவையின் காலம் (1923_-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்கள் முத்து முத்தானவை.
ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.
ஆண்டாண்டு காலமாகப் பார்ப்பனர்களின் அடுப்பங்கரையாக கோயில்கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).
கோயில் கொள்ளையைக் கட்டுப் படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.
பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர்! விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.
நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்க வில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்
_- இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத்திலகம் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள்தான்.
சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் -_ நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர். சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கிலத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் - கத்தினார்.
சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும் பலன் அளிக்கவில்லை என்று சமஸ்கிருதத்திலேயே பாடவும் செய்தனர்.
(கே.குமாரசாமி எழுதிய திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும். பக்கம் 73)
இதனையும் மீறி சட்டம் நிறை வேற்றப்பட்டது.
பார்ப்பனர்களாலேயே ராஜதந்திரி என்று ஒப்புக் கொள்ளப்பட்ட பனகல் அரசர் மிகச் சாதுரியமாகக் காயை நகர்த்தி பார்ப்பனர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்!
அம்மசோதாவை நிறைவேற்றுவதற்காக சிறப்பு உறுப்பினராக யாரை நியமித்தார் தெரியுமா? என்.கோபால்சாமி அய்யங்காரை. அந்தப்பதவிக்கான பெயர் எக்ஸ்பர்ட் மெம்பர் என்பதாகும். அடுத்துப் பாருங்கள்.
அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தத் துறையின் தலைவராக யாரை நியமித்தார் தெரியுமா? ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதாசிவ அய்யரை.
உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி மாதிரி பார்ப்பனர்கள் நெளிந்தனர். கோபால்சாமியை விஞ்சி விட்டாரே எக்ஸ்பர்ட் பனகல் அரசர்!
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக