திங்கள், 17 ஜூலை, 2017

இலக்கியத்தில் பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

1. குறுந்தொகையும் பார்ப்பனரும்
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ! மயலோ இதுவே!
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்.
இது குறுந்தொகையில் உள்ள பாட்டு. இப்பாட்டால் சமுதாயத்தில் பார்ப்பனர் நிலை என்ன? என்பது நன்கு விளக்கப்படுகிறது. பாங்கனாக இருந்து ஆணையும், பெண்ணையும் கூட்டி வைப்பது இவர்கள் நிலை என்பது விளங்குகிறது.


இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள் மணிமேகலையும் பார்ப்பனரும்

மணிமேகலை ஆசிரியரான சீத்தலைச்சாத்தனார் ஆபுத்திரன் என்று ஒரு பாத்திரத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பைக் கொண்டு பார்ப்பனர் புரட்டுகளைக் கூறுகின்றார்.
காசியிலுள்ள அபஞ்சிகன் என்னும் வேதம் சொல்லிக் கொடுக்கும் பார்ப்பான் மனைவி சாலி என்பவள். இவள் கணவன் வழி நிற்கவில்லை. கண்டபடி வாழ்ந்தாள். இப்பாவத்தைப் போக்கிகொள்ளத் தெற்கேயுள்ள கன்னியாகுமரிக்கு நீராட வந்தாள். ஒருநாள் இரவில் குழந்தை ஒன்றைப் பெறுகிறாள். இரவில் குழந்தையைத் தோட்டம் ஒன்றில் எறிந்துவிட்டுப் போய்விடுகிறாள். அவ்வழியே வந்த இளம்பூதி என்ற பார்ப்பனன் அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறான். அதுவரையிலும் ஒரு பசு அவனுக்குப் பாலூட்டிக் காத்தது. இளம்பூதி, ஆபுத்திரனுக்குப் பார்ப்பன முறைப்படி வேதம் ஓதுவித்தான். அவனும் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து வந்தான். வேள்வி செய்யும் பார்ப்பனர் ஒரு பசுவைக் கொண்டு வந்து கொன்று வேள்வி செய்ய முனைந்தனர். அதனைக் கண்ட ஆபுத்திரன் பசுவை இரவோடு அவிழ்த்துக் கொண்டு போய்விடுகிறான்.

வேள்வி செய்வோர் திடுக்கிட்டனர். பசுவை எங்கும் தேடினர். ஆபுத்திரன் பசுவைக் கொண்டு போவதைக் காட்டில் கண்டுபிடித்தனர். வேள்வியாசிரியன் முதலான பல பார்ப்பனர் அங்குக் கூடிவிட்டனர். எல்லோரும் அவனை வருத்த முற்பட்டனர். ஆபுத்திரன், பார்ப்பனர்களோடு வாதிட்டான். பசுவால் வரும் தீமை என்ன? என்று கேட்டுவிட்டு அது மக்களினத்திற்குப் பாலுதவி செய்யும் பல நன்மைகளை விரித்துப் பேசினான். இதனைக் கேட்ட ஒரு பார்ப்பனன் இவன் பசுவுக்குப் பிறந்தவன். ஆகவே இந்த வேலையைச் செய்தான் என்று கூறினான். அதற்கு விடை கூறும் ஆபுத்திரன், பார்ப்பனர்கள் மிகக் கொண்டாடும் முனிவர் பலரின் வரலாறுகளைக் கூறி ஏசினான். அசலன் என்ற முனிவன் பசுவுக்குப் பிறந்தவன். சிருங்கி முனிவன் மானுக்குப் பிறந்தவன். இவர்களெல்லாம் உங்கள் குலத்தில் தோன்றிய இருடிகளென்று பெருமையடித்துக் கொள்ளுகின்றீர்களே ஆவுக்குப் பிறந்ததில் என்ன இழிவு? என்று கேட்டான்.

பார்ப்பனர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. இவன் பிறப்பை யான் அறிவேன். இவன் கண்டபடித் திரிந்த ஒரு பார்ப்பனத்தி மகன். இவன்தான் என்னிடத்தில் தன் வாழ்வின் நிகழ்ச்சிகளைச் சொன்னான். ஆகவே இவனொரு இழிமகன் என்று ஒருவன் கூறினான். ஆபுத்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீங்கள் கொண்டாடும் வேதங்களில் வல்ல முனிவர்களின் பிறப்புக்கு என் பிறப்பு ஒன்றும் குறைந்துவிடவில்லை. நீங்கள் மிகக் கொண்டாடும் வசிட்டர் அகத்தியர் இருவரும் திலோத்தமை என்னும் தேவடியாளுக்கும் பிரமனுக்கும் பிறந்தவர்கள். இவர்களைக் கொண்டாடவில்லையோ? என்னுடைய தாயான சாலிக்குள்ள தவறு ஒன்றும் குறையுடையதல்ல என்று கூறினான். பிறகு பார்ப்பனர் இவனை ஊரைவிட்டே விரட்டி விடுகின்றனர்.
இதனால் சாத்தனார் பார்ப்பனரின் அறிவுக்கொவ்வாத அண்டப்புரட்டுகளாகவும், இழிவாகவும் கூறியுள்ள பார்ப்பன முன்னோர்களின் வரலாற்றை இழித்தும், பழித்தும் பேசி அவர்களின் செல்வாக்கைக் குறைக்கவே ஆபுத்திரன் என்ற ஒரு படைப்பைத் தம் நூலில் கூறினார் என்றும் அறியலாம். முறையான வாழ்க்கை என்பது அவர்கட்கு இல்லை என்பதை அவர்கள் மிகக் கொண்டாடும் முனிவர்களின் வரலாறுகள் புலப்படுத்துகின்றன.

இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள் கம்பரும் பார்ப்பனரும்

பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியருக்கு ஆன் குலம் ஈத்து அவர்
கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைத்தழும் செய்கையாள்
சுந்தரகாண்டம், காட்சிப்படலம் - 26
இப்பாடலில் கம்பர் பார்ப்பனரான வேதியரின் பேராசைப் போக்கினை நன்கெடுத்துக் கூறுகிறார். தான் தாங்கவிருந்த அரசச் செல்வம் ஒழிந்து போகக் காட்டிற்குப் போகும் நாளிலும் இவ்வேதியருக்கு மனம் இரங்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வையே எண்ணிக் கொண்டிருப்பவர்கள். அதனைச் சுட்டவே அருத்தி வேரியர் அதாவது பேராசை கொண்ட வேதியர் என்று கூறினர். மேலும் அவர் ஆசைக் கருத்துக்கு எல்லையே இல்லை என்றும் கூறியுள்ளார்.
- பேராசிரியர் .இராமநாதன், எம்.., பி..எல்.,


இலக்கியத்தில்
பார்ப்பனர் பற்றி திருமூலர்
- புலவர் கோ.இமயவரம்பன்

சைவ சமயத்தவர் தங்கள் மதத்திற்குப் பெரிதும் ஆதாரமாகத் தமிழில் உள்ள ஆகமங்களைத்தாம் காட்டுவர். இந்த ஆகமம் பன்னிரண்டு திருமுறைகளையும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களையும் கொண்டது என்றும் கூறுவர். இந்த பன்னிரண்டு  திருமுறைகளில் 10 ஆவது திருமுறையாகத் திருமூலரின் திருமந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் திருமூலர் பார்ப்பனர்களைப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களை இங்கே காண்போம்.

பார்ப்பான் அர்ச்சகனாக இருக்கக் கூடாது.

கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்ப்பான் கடவுளை அர்ச்சிக்கக் கூடாது. அர்ச்சித்தால் போர்க் குணம் படைத்த நாடாளும் மன்னனுக்குக் கொடிய நோய் உண்டாகும். அதோடு நாட்டிலும் பெரிய பஞ்சம் ஏற்படும் என்று நந்தி கூறியதாகக் கூறுகின்றார்.
பேர் கொண்ட பார்ப்பான்
பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்குப்
பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே              திருமந்திரம் - 519

உச்சிக் குடுமி, பூணூல் காரணமாக பார்ப்பான் ஆகான், பார்ப்பான் உச்சிக் குடுமியும், பூணூலும் கொண்டதன் காரணமாகவே பிராமணன் ஆகிவிட மாட்டான். அவன் அணிந்திருக்கும் பூணூலானது பஞ்சினாலானது. உண்மையான நூல் என்பது வேதாந்தமாகும். குடுமி என்பது மெய்யறிவாகும்.
நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.           திருமந்திரம் - 230

பார்ப்பானின் உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுக்க வேண்டும்.

அறியாமையைப் போக்கிக் கொள்ளாத பார்ப்பனர்கள் உச்சிக்குடுமியும் பூணூலும் பெற்று இருப்பார்களேயானால், இந்த மண்ணுலகானது சோர்வடையும். பெருமை பொருந்திய வாழ்வினையுடைய மன்னவனும் தனது சிறப்புகளை இழப்பான். ஆதலால் இதனைப் பகுத்துணர்ந்து பார்ப்பானுடைய ஆடம்பரப் பூணூலையும் உச்சிக் குடுமியையும் அறுத்தெறிவதே நல்லதாகும்.

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம்பரநூற் சிகையறுத் தால் நன்றே             திருமந்திரம் - 241
                (நூல் - பூணூல், சிகை குடுமி)

                பார்ப்பானுக்கு மன்னன் நல்லறிவு புகட்ட வேண்டும்.

தெளிந்த அறிவில்லாத பார்ப்பனர்கள் சடைமுடி, பூணூல் கொண்டு மெய்ஞ்ஞான ஞானிகளைப் போல் நடித்து மக்களை ஏமாற்றி உலவக்கூடும். இப்படிப்பட்ட பார்ப்பனர்களை மன்னன் அறிவாளிகளைக் கொண்டு பரிசோதித்து அவர்களுக்கு நல்லறிவு உண்டாக்குவானேயானால் அது நாட்டுக்கு நன்மை பயக்கும்.
ஞானமி லாதார் சடைசிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நல மாகும் நாட்டிற்கே திருமந்திரம் - 242
(மூடர்களே பார்ப்பனர்)

உண்மை பேசுதல் இல்லாமலும் தெளிந்த நல்லறிவு இல்லாமலும், எல்லோருக்கும் பொருந்தும் விஷயங்களை அறிவுகொண்டு ஆய்ந்துணரும் தன்மை இல்லாமலும், பக்தி இல்லாமலும், கடவுளைப் பற்றிய உண்மை அறியாமலும் இருக்கின்ற பித்தம் பிடித்த மூடர்கள் தாம் பிராமணர்கள் ஆவார்கள்.

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.
                                                                திருமந்திரம் - 231 - 2


இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

பத்திரகிரியார் பாடல் 155
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?
                (பக்கம் 74)

இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

(சிவவாக்கியர்) பாடல்கள் 13

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்கவல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமுத்தி சித்தியே   (பக்கம் 81)
38. பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்துபாரும் உம்முளே.             (பக்கம் 84)

46. கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
துடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.(பக்கம் 85)

131. மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றலோ வளர்ந்துரூபம் ஆனது
நாதம் ஏது வேதம்ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம்ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா.      (பக்கம் 94)

154. மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மான்உரித்த தோலலோ மார்பில்நூல் அணிவதும்.             (பக்கம் 97)

155. ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது            (பக்கம் 97)

242. சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது நீரிருந்த அட்சரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகக் கபடரே.          (பக்கம் 106)

306. இட்டகுண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. (பக்கம் 113)

421. ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே.        (பக்கம் 125)

இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்
பாம்பாட்டி சித்தர் பாடல்
98. சதுர்வேதம் ஆறுவகைச் சாத்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடு பாம்பே!           (பக்கம் 149)
இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

அகப்பேய்ச் சித்தர் பாடல்
90. வேதம் ஓதாதே
மெய் கண்டோம் என்னாதே;
பாதம் நம்பாதே
பாவித்துப் பாராதே               (பக்கம் 177)


இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

ஞான வெட்டியான் பாடல்
சாஸ்திரம் பார்த்துப் பிறந்தாளாம் பின்
சாஸ்திரம் பார்த்துச் சமைந்தாளாம்
சாஸ்திரம் பார்க்கின்ற பார்ப்பாரப் பெண்கள் தாலியறுப்பதேன் ஞானப் பெண்ணே.


இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

கபிலன் அகவல் பார்ப்பன மாந்தர்காள்! பகர்வது கேண்மின்!
சிறந்தவ ராய்உமை இவ்விடை இருத்திப்
பாவனை மந்திரம் பலபட உரைத்தே
உமக்கவர் புத்திரர் ஊட்டின போது
அடுபசி யால்குலைந் தாங்குஅவர் மீண்டு
கையேந்தி நிற்பது கண்டதார்? புகலீர்!
அருந்திய உண்டியால் ஆர்பசி கழிந்தது?
ஒட்டியர் மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்
பற்பலர் நாட்டிலும் பார்ப்பார் இலையால்;
முற்படைப்பு அதனில்வே றாகிய முறைமைபோல்
நால்வகைச் ஜாதியிந் நாட்டினில் நாட்டினீர்;
மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்; பெற்றமும் பெருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு ஜாதியில் ஆண்பெண் மாறிக் கலந்து கருப்பெறல் கண்ட துண்டோ?
ஒருவகைச் ஜாதியாம் மக்கட் பிறப்பிலீர்
இருவகை யாக நீர் இயம்பிய குலத்து
ஆண்பெண் மாறி அணைதலும் அணைந்த பின்
கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின் றிலீரோ
எந்நிலத்து எந்தவித்து இடப்படு கின்றதோ
அந்நிலத்து அந்தவித்து அங்குரித்திடும் அலரல்
மாறிவே றாகும் வழக்கம்ஒன்று இலையே!
பூசுரர்ப் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திரர் ஆயினோர் பூசுரர் அல்லரோ?
பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல்போல்
மாந்தரில் பேதமாம் வடிவுஎவர் கண்டுளார்?
வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில்
வேற்றுமை ஆவதும் வெளிப்பட லின்றே;
தென்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகின்
பழுதற ஓதிப் பார்ப்பான் ஆவான்;
வடதிசைப் பார்ப்பான் தென்திசைக்கு ஏகின்
நடையது கோணிப் புலையன் ஆவான்;
                                அது நிற்க-
சேற்றில் பிறந்த செங்குழு நீர்போலப்
பிரமற்குக் கூத்திவயிற் றில் பிறந்த வசிட்டரும் வசிட்டருக்குச் சண்டாளிவ யிற்றில் பிறந்த சத்திரியரும்
சத்திரியர்க்குப் புலைச்சிதோள் சேர்ந்துபிறந்த பராசரரும்
பராசரர்க்கு மீன்வாணிச்சி வயிற்றிற்பிறந்த வியாசரும்
இந்நால்வரும்
வேதங்கள் ஓதி மேன்மைப் பட்டு
மாதவ ராகி வயங்கினர் அன்றோ?

இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

அவ்வையார் பாடல்

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியுமாவான் வழிக்குத் துணையாவான்
அந்தவரசே யரசு.
இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

அவ்வையார் - (தனிப்பாடல் திரட்டு)
சோழ அரசன் தனக்கு அமைச்சனாக எக்குலத்தானை வைத்துக் கொள்ளலாம்? என்று கேட்டான்.

அதற்கு மறுமொழியாக அவ்வையார் பாடியது இது. இதன் கருத்து:

பார்ப்பனரை அமைச்சராக வைத்துக் கொண்டால் ஆட்சி முறைகள் கெட்டுப் போகும். ஆட்சியில் நீதிமுறைகள் ஒழுங்காக நில்லாது. உன்னினத்தானாகிய சோழன் ஒருவனை அமைத்துக் கொண்டால் அவனால் சண்டைகள் பெருகும். நாட்டிலும் ஆட்சியிலும் அமைதி இருக்காது. அது மட்டுமல்லாமல் ஆட்சி முறைகளும் சீரழிந்து குடிமக்கட்குத் துன்பங்கள் மிகும். நான்காமவனாகக் கருதப்படும் சூத்திரனை அமைச்சனாக அமைத்துக் கொண்டால், நல்ல அமைச்சனாகவும் நீ சொல்லும் வழிக்குத் தக்க துணையாகவும் இருப்பான். அப்படி சூத்திரனை அமைச்சனாகப் பெற்ற அரசு நல்ல அரசாக விளங்கும் என்பது இப்பாடலின் கருத்து.   இலக்கியத்தில்   பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

பிறப்பிலேயே பார்ப்பான் பகையொழுக்கமுள்ளவன். பிறரை உள்ளன்புடன் நேசிக்காத பண்பினன் என்பதை கீழ்வரும் பாடலால் அறியலாம்.
நீதி வெண்பா              (பாட்டு - 64)
வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும்
பூசுரருங் கோழிகளும் பொன்னனையாய் - பேசிலொரு
காரணந்தானின்றியே கண்டவுடனே பகையங்
காரணந்தா னப்பிறப்பே காண்.
விதிநூல் - சட்டநூல்; பூசுரரும் - பார்ப்பனரும்
அப்பிறப்பே - அப்பிறவியே
நாயையும், கோழியையும் எடுத்துக்காட்டியது பார்ப்பானுக்கு (பூசுரருக்கு) உள்ள குணத்தை புலப்படுத்துவதற்கு. (கருத்து) பொது மகளிர், மருத்துவர், பார்ப்பனர் என்பாரின் பகையாந் தன்மை அவர்களுக்கு பிறப்பிலேயே உள்ளது.
விவேக சிந்தாமணி
கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை யென்செயப் படைத்தாய்?
(கருத்து) கருங்கல்லைப் போன்ற
நெஞ்சத்தை உடைய பார்ப்பனரைப் படைத்திருந்தும்
காகத்தையும்
ஏன் படைத்தாய்?    (விவேகசிந்தாமணி - பாடல் எண் - 82)



இலக்கியத்தில்
பார்ப்பனர் எதிர்ப்புக் கருத்துகள்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்
                                                (நூல்: தமிழியக்கம்)

கற்கின்ற இருபாலீர்            ஆர்வமிக உள்ளவன் போல்!
தமிழ்நாட்டின் கண்ணொப்பீர்                     நம்ப வேண்டாம்
கனி யிருக்க                பார்ப்பானின் கையை எதிர்
நிற்கின்ற நெடுமரத்தில்                  பார்ப்பானை யேபார்ப்பான்
காய்கவர நினையாதீர்                      தின்னப் பார்ப்பான்.
மூது ணர்வால் முற்கண்ட எவற்றினுக்கும் தமிழின்பேர் சொல்லி மிகு
முதலான நந்தமிழை                        தமிழரிடைத் தமிழ் நாட்டில்
இகழ்த லின்றிக் வாழ்ந்திட் டாலும்
கற்கண்டாய் நினைத் தின்பம்    தமிழழித்துத் தமிழர் தம்மை
கைக்கொண்டு வாழ்ந்திடுவீர்     தலை தூக்கா தழித்துவிட
நன்றே என்றும்        நினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான்
ஆங்கிலத்தைக் கற்கையிலும் அத்தனையும் நஞ்சென்க
அயல்மொழியைக் கற்கையிலும்         நம்ப வேண்டாம்
எந்த நாளும்                தமிழர்கடன் பார்ப்பானைத்
தீங்கனியைச் செந்தமிழைத் தரைமட்டம் ஆக்குவதே
தென்னாட்டின்         என்றுணர்வீர்
பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர்           தமிழரின் சீர் தனைக் குறைத்துத்
ஏங்கவைக்கும் வடமொழியை தனியொருசொல் சொன்னாலும்
இந்தியினை எதிர்த்திடுவீர்          பார்ப்பான் தன்னை
அஞ்ச வேண்டாம் உமிழ்ந்திடுக மானத்தை
தீங்குடைய பார்ப்பனரின்               ஒரு சிறிதும் இழக்காதீர்
ஆயுதங்கள் இந்தி வட      தமிழைக் காக்க
சொல் இரண்டும்    இமையளவும் சோம்பின்றி
பார்ப்பான் பால் படியாதீர்; எவனுக்கும் அஞ்சாது
சொற்குக்கீழ்ப் படியாதீர்  தொண்டு செய்வீர்
உம்மை ஏய்க்கப்     சுமை உங்கள் தலைமீதில்
பார்ப்பான்; தீ துறப்பார்ப்பான்       துயர்போக்கல் உங்கள் கடன்!
கெடுத்துவிடப் பார்ப்பான் எப்      தூய்தின் வாழ்க!
போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே


நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக