தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம் என்று பாட்டுப்பாடுவார்கள்.
உண்மை என்பது இதற்கு எதிரானது. தன்னைத் தரிசிக்க வந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுகாருக்கு என்ன ஏற்பட்டது?
எத்தனை முறை திருப்பதி மலைப் பகுதியில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் உருண்டதுண்டு, மரண ஓலங்கள் கேட்டதுண்டு. எத்தனை எத்தனைப் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தற்கொலை செய்து கொண்டார்கள்.
திருப்பதி ஏழுமலையானுக்கு எந்தவித சக்தியும் இல்லை என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிப்பதுபோல யுனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் திருப்பதியை மய்யப்படுத்தியே ஒரு இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. திருப்பதி திருமலை எல்லைக்குள் நடக்கும் விபத்துகளில் எவரேனும் உயிர் இழந்தால், அவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு அளிக்க திருப்பதி தேவஸ்தானமும், யுனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்சும் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திரு நெல்வேலிக்கே அல்வா கொடுத்து விட்டார்கள்.
திருப்பதி மலையானுக்குச் சக்தி இல்லை என்பதை திருப்பதி தேவஸ்தானமும் ஒப்புக் கொண்டு முன்வந்துள்ளது என்பதும் இங்குக் கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
எல்லாம் திருப்பதி வெங்கடேச பெருமாள் பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை திருப் பதி தேவஸ்தானத்துக்கே ஏற்படவில்லையே! இது எவ்வளவுப் பெரிய கடவுள் நம்பிக்கைக்கு எதிரான நாத்திகச் செயல்.
உண்மை என்ன வென்றால் மற்றவர்களை விட அவர்களுக்குத் தான் ஏழு மலையானுக்குச் சக்தி இல்லை என்ற விடயம் மிக நன்றாகத் தெரியும்; அவர்கள் தானே அந்தக் குத்துக் கல்லுக்கு மிக அருகா மையில் இருக்கக் கூடியவர்கள்?
22.3.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக