ஞாயிறு, 16 ஜூலை, 2017

நடராஜர்


அந்த உலோகச் சிலைக்கு உலகத்தையே இயங்க வைக்கக் கூடிய ஆற்றல் இருக்குமேயானால், அந்தக் கோயிலுக்குள்ளேயே ஆண்டாண்டு காலமாகச் சுரண்டிக் கொழுக்கும் அர்ச்சகப் பார்ப்பனப் பெருச்சாளிகளை எப்படி அனுமதித்து இருக்கும்?

சிதம்பரம் கோயில், தீட்சிதப் பார்ப்பனர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில், 2009 பிப்ரவரி 5 ஆம் தேதி முதன்முதலாக முறையாக உண்டியல் வைக்கப்பட்டது.

இதுவரை ஆறுமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டதில் வசூலான தொகை ரூ.17 லட்சத்து 2735 ஆகும். இதுதவிர பிரசாதக் கடை ஏலத்திற்கான முன்தொகை உள்ளிட்டவைமூலம் கிடைத்த தொகை ரூ.24.5 லட்சம். ஆக மொத்தம் இந்த 14 மாதங்களில் ரூ.29 லட்சமாகும்.

அதேநேரத்தில், சிதம்பரம் கோயில்பற்றிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது இந்தத் தீட்சிதப் பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல் என்ன தெரியுமா? கோயில் ஆண்டு வருமானம் ரூ.37,199 என்றும், அதில் செலவு போக மிச்சம் ரூ.199 என்றும், பேட்டா செருப்பு விலை போலக் கூறினார்களே, அப்படியானால், இத்தனை நூறு ஆண்டுகாலமாக இந்தக் கோயில் பூனைகள் ஏப்பமிட்ட தொகை எத்தனை எத்தனைக் கோடி.

நெஞ்சாரப் பொய் கூறிப் பிழைப்பு நடத்திட இந்த முக்குடுமி தீட்சிதப் பார்ப்பனர்களைத் தடுக்காத, தண்டிக்காத இந்த சிதம்பரம் நடராஜர் என்னும் குத்துக் கல்லா ஆக்கல், காத்தல், அழித்தல் உள்ளிட்ட அய்ந்து தொழில்களையும் செய்கிறது? பார்ப்பான் நினைத்தால் பிரச்சாரத்தின்மூலம் மாட்டு மூத்திரத்தையும், சாணியையும் பஞ்சகவ்யம் என்று குடிக்கச் செய்துவிடுவானே!
அப்படியிருக்கும்போது கல்லைக் கடவுளாக்கி நம்பச் செய்ய முடியாதா என்ன?

28.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக