அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது என்று சொல்லி அதற்குள்ளும் மூட நம்பிக்கைகளைத் திணித்து மக்களை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் இந்து மத சனாதனிகள் -சோதிடர்கள்!
மக்கள் எந்த வகையிலும் அறிவு பெற்றுவிடக் கூடாது என்பதிலே இவர்களுக்கு அவ்வளவு அக்கறை. எவ்வளவுக்கெவ்வளவு பக்தியிலும், சம்பிரதாயங்களிலும், சடங்குகளிலும் மக்கள் மூழ்கிக் கிடக்கிறார்களோ, அவ்வ ளவுக்கவ்வளவு புரோகிதச் சுரண்டல் தொழில் ஓகோ என்று நடக்கும்தானே?
சோதிட சாஸ்திரப்படி சூரியன்தான் அனைத்துக் கிரகங்களுக்கும் தலைவன் என்று கதையை ஆரம்பிக்கிறார்கள். இந்த இடத்தி லேயே அவர்களை மடக்கி விடலாம். சூரியன் கிரகமா? நட்சத்திரமா? இந்த அடிப்படை கூடத் தெரியாத மரமண்டைகள் நட்சத்திரமான சூரியனைக் கோள் என்று கற்பித்துக் காலட்சேபம் நடத்துகின்றன.
சூரியன் தனது நட்சத்திரமான கிருத்திகையிலும், அடுத்த நட்சத்திரமான ரோகினி நட்சத்திரத்தில் செல்லும் நேரமே அக்னி நட்சத்திரம் என்கிறார்கள்.
சூரியனுக்கு மனைவி உண்டு என்றும், பிள்ளைக் குட்டிகள் உண்டு என்றும், தேர் உண்டு என்றும் பிதற் றும் புராணிகர்கள் எதைத் தான் உளற மாட்டார்கள்! இந்து மதத்தில் எதை எடுத்தாலும் ஆண், பெண் உறவு, இச்சைகள் சமாச் சாரம் இல்லாமல் இருக்கவே இருக்காது.
சூரியன் பெண்ணோடு கூடினான் என்பதெல்லாம் நம்பக் கூடியதா? 9 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கும்போதே சூரிய வெப்பத்தைத் தாங்க முடியவில்லை என்றால், ஒரு பெண்ணின் கெதி என்னாவது!
அக்னி நட்சத்திரக் காலத்தில் சூரியனை தின மும் வழிபடவேண்டுமாம். அதுவும் மந்திரங்களைக் கூறி கும்பிடவேண்டுமாம்; 12 முறை கிழக்கு நோக்கிக் கும்பிடவேண்டுமாம்!
காட்டுவிலங்காண்டி மனிதன் கொடுமழைக்கு அஞ்சியும், கொடிய மிரு கங்களின் தாக்குதலுக்கு ஆளாகிப் பயந்தும், இடியைக் கண்டு மிரண்டும் நடுநடுங்கியபோது மழையையும், மிருகங்களையும், வானத்தையும் நோக்கிக் கும்பிடு தண்டம் போட் டான்.
அறிவியல் வளர வளர அவற்றையெல்லாம் மனிதன் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். அறிவியல் வளர்ந்த நிலையிலும் அந்தக் காட்டுவிலங்காண்டிக் காலத்து அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற முடியாமல் தவிக்கிறான்.
மதவாதிகள் மூளைக்கு பக்தி விலங்கினை மாட்டி விட்டதன் பரிதாப நிலை தான் இது.
இந்த அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்தலாமாம்; ஆனால், புதுமனை புகக்கூடாதாம். ஏன் புதுமனை புகுவிழா சுபகாரியம் இல் லையா?
சாராயம் குடித்த பைத்தியக்காரனைத் தேள் கொட்டிய கதைதான் மதவாத சமாச்சாரங்கள்! அந்தோ பரிதாபம்!
4.5.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக