ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஒன்று கூடி விட்டோம் தலையெழுத்தே பிராமணர்கள்தான் !


நாம் இன்று ஒன்று கூடி விட்டோம். நான் இத்தனை காலமாக எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றுதான் எனக்காக பேசுகிறேன்.

இங்கு கூடியிருந்த கூட்டத்தில் பெருமையோடு கூறுகிறேன். நான் ஒரு பார்ப்பான் என்று தமிழ்நாட்டை பார்த்து நாங்கள் இன்று எச்சரிக்கை செய்கிறோம்.

2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான்  நிர்ணயிப்பார்கள்.

நம்மைப் பார்த்தாலே எல்லாரும்  பயப்படணும்.

நாம் நம்முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல்  மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும்.

எவனாவது கோயில் புரோகிதன், குருக்கள் பணம் கேட்கிறான் என்று வெளியே வந்து சொன்னால் கூட்டம் கூட்டமாக வந்து கைவைங்கடா. நான் அப்படித்தான் சொல்வேன் கைவைங்கடா! தமிழ்நாடே இனிமேல் நம் பக்கம் திரும்ப வேண்டும்.

மணிகண்டன் பேச்சு
(தமிழ்நாடு ‘பிராமணர்’ சங்கம் வெள்ளிவிழா மாநாடு சென்னை அண்ணா நகரில் டி.கே. ரெங்கநாத அய்யர் நகர் - ஸ்ரீ கிருஷ்ணா கார்டன் டிசம்பர்- 24, 25 2005)


பிராமணன் என்று சொல்லடா!

நாசாவில் ராக்கெட் பறக்க காரணம்!
நடிகர் டெல்லி கணேஷ் பேச்சு

நாமெல்லாம் உதாரணப் புருஷர்கள்.
நாசாவில் ராக்கெட் பறப்பதற்கு நாம்தான் காரணம்.
பிராமண இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.
ஒரே மனித இனமா வாழ்ந்துவிடலாம் என்று பார்த்தோம். முடியவில்லை.  இப்போ ஜாதி  ரீதியாகத்தான் வாழமுடியுது.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா அது ஒரு சுலோகம்.
பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா. இது நம்ம சுலோகம்.
நடிகர் டெல்லி கணேஷ் பேச்சு 
(தமிழ்நாடு ‘பிராமணர்’ சங்கம் வெள்ளிவிழா மாநாடு சென்னை அண்ணா நகரில் டி.கே. ரெங்கநாத அய்யர் நகர் - ஸ்ரீ கிருஷ்ணா கார்டன் டிசம்பர்- 24, 25 2005)

சரஸ்வதி ராமநாதன் பேச்சு 

நமது பலம் நாம் காலகாலமாக கடைபிடித்து வரும் கோவிந்தமும், கீதையும், கோமாதாவும்தான்.

ஓசியில் (Open Competition)  10 சதவீதம் பிராமண குழந்தைகள் வரவேண்டும். மத்தவர்களை விட நாம் உசத்தியா இருக்கோம்.
பெண்கள்தான் நமது கலாசாரத்தை காப்பாற்றுகிறார்கள்.

சிலபேர் மாநாடு போட்டா ப°சை செக் பண்ண வேண்டியிருக்கு. சட்டைக்குள்ள அரிவாள் °டாண்ட் அந்த அரிவாளுக்கு இல்லாத பலம் நம்ம நாக்கில் இருக்கிற மந்திரத்தில் இருக்கு.

புதுக்கோட்டைக்கு பக்கத்தில் காந்தி நகர். காந்தி நகர் என்றாலே யாருக்காக ஒதுக்கப்பட்டது என்று தெரியும். அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கலப்பு மணங்கள் நமது கலாசாரத்தை சீரழிக்கிறது.

பிராமின் என்று ஒரு கலாசாரம் இருந்தால் போதும், உட்பிரிவுகள் கூட தேவையில்லை என்று ஆச்சார்ய °வாமிகள் கூறியிருக்கிறார்.

சரஸ்வதி ராமநாதன் பேச்சு
(தமிழ்நாடு ‘பிராமணர்’ சங்கம் வெள்ளிவிழா மாநாடு சென்னை அண்ணா நகரில் டி.கே. ரெங்கநாத அய்யர் நகர் - ஸ்ரீ கிருஷ்ணா கார்டன் டிசம்பர்- 24, 25 2005)

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக