சீரங்கத்தில் வைதீகக் கல்யாணத்தில் ஓமகுண்டத்தின் தீயால் பந்தல் பற்றி எரிந்து அறுபதுக்கு மேற்பட்ட மனித உயிர்கள், பச்சிளம் பிஞ்சுகள் உட்பட கொடூரமான முறையில் வெந்து மாண்டதை எண்ணி எண்ணி நெக்குருகிறோம்.
வீடு தீபற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கிடைத் தது என்று கருதுகிற மனப்பான்மையுடையவர் இன்றும் இருக்கிறார்களே, அவர்கள் மடாதிபதியாகக் கூட இருக்கிறார்களே என்பதை எண்ணும்போது மனிதநேய நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது. அக்னியைப் பகவான் என்கிறார்கள்; அந்த அக்னிப் பகவானின் கொடிய பசிக்கு இரையானவர்களை மோட்ச லோகத்துக்கு அனுப்புகிறார்களாம்!
எங்கே? காஞ்சீபுரத்தில்! அங்குள்ள காமாட்சியம்மன் கோயிலில் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்தில் சனியன்று மாலை மோட்ச விளக்கை ஏற்றச் சொன்னாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திரர் சரஸ்வதி; எப்படி இருக்கிறது?
நாட்டில் எதற்கு ஆபத்து வந்தாலும் கவவையில்லை பார்ப்பனர்களுக்கு! பக்தி
சமய நம்பிக்கைகளுக்கு மட் டும் ஹானி ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு ஆபத்து வந்துவிட்டால் அவாளின் பிழைப்பில் மண் விழுந்து விடும் ஆதிக்கத்திற்கு அதோ கதி ஏற்பட்டு விடுமே!
அதனால்தான் இந்தத் தில்லுமுல்லுகள்! ஓமகுண்ட மாவது மண்ணாங்கட்டியாவது! புரோகிதமாவது மந்திரமாவது! சுத்த புரூடா என்கிற எண்ணம் எங்கே மக்களுக்கு ஏற்பட்டு விடுமோ என்கிற திகிலில் இந்தப் பார்ப்பனர்கள் அதனை மடை மாற்றம் செய்ய வேண்டியவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
அதையும் அந்தப் பக்தியைக் கொண்டே செய்து விடுகிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கத் தகுந்தது! சிந்தனையைத் தடை செய்யும் மகத்தான ஆயுதம் அந்தப் பக்தி என்னும் மூட நம்பிக்கைதான் என்பதை அவர்கள் மிகச் சரியாகத் தெரிந்து வைத்துள்ளார்கள். அதில் ஒரு யுக்திதான் இந்த மோட்ச தீபம் என்பது.
அங்கே மாண்டவர்கள் அய்தீகத்தில் ஊறிப்போன வர்கள்தாம்! அந்த கல்யாணம் எல்லா சம்பிரதாயங்களையும் உள்ளடக்கி நடத்தப்பட்டது தான்.
என்றாலும் இந்தக் கொடுமை நடைபெற்றுள்ளதே இதைப்பற்றி பக்தர்கள் சிந்திக்க வேண்டாமா?
காந்தியாரை கோட்சே என்னும் இந்து மதவெறி பிடித்த பார்ப்பான் கொன்ற போது, மதத்திற்கு அதனால் மரியாதை குறைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா? எல்லாப் பாவத்துக்கும் தோஷம் கழிப்பது ஸ்நானம் செய்வதுதான்;
அதனைச் செய்யுங்கள் என்றார்.
மக்களைத் திசை திருப்ப பார்ப்பனர்கள் அன்று தொட்டு இன்றுவரை தந்திரங்களில் ஈ டுபட்டுத் தான் வருகிறார்கள். மக்கள் குறிப்பாக பார்ப்பனர் அல்லாத மக்கள்
இதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா?
25.1.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக