ஞாயிறு, 16 ஜூலை, 2017

மொழி வழி


இன்று மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாள் (1956). இந்நாள் தமிழ்நாட்டு வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்ட வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நாள்.

மொழியின் அடிப்படையிலே 14 மாநிலங்கள் அவ்வாறு பிரிக்கப்பட்டன.

அன்று, அந்தக் காலகட்டத்திலேயே சென்னை மாநிலத்திற்குத் ``தமிழ்நாடு என்ற பெயர் வந்திருக்க வேண்டும். பார்ப்பன ஆதிபத்தியம் அவ்வளவு எளிதில் விட்டுவிடுமா?

அன்றைக்கு, `விடுதலை எழுதியது: ``தமிழ்நாடு என்று பெயர் இல்லாமலிருப்பது விருந்தின் நடுவே சாணியை உருட்டி வைப்பது போன்ற ஆபாச நிலை என்று அழுத்தமாகத் தலையங்கம் தீட்டியது `விடுதலை, (31.10.1956).

அந்தத் தமிழ்நாடு தி.மு.., ஆட்சிக்காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த காலத்தில் வந்து சேர்ந்தது (18.7.1967).

``தமிழ்நாடும் வந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டின் கோயில்களில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற நிலை இன்றுவரை இல்லை.

இன்னும் தமிழர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கல்யாணம் முதல் கருமாதிவரை சமஸ்கிருத ஆதிக்கம் இருந்துகொண்டு தானிருக்கிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள்  பெரிய பதவித் தமிழர்களில் பலர் தன் தாயை மதிக்காமல், தன் மானம் சிறிதுமின்றி பக்தி என்ற பெயரில், ஆரிய வலை விரிப்பில் வீழ்ந்து, சமஸ்கிருதத்தின் காலடியில் அதன் விரலைச் சூப்பிக் கொண்டுதான் கிடக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி. நடைமுறையில் கோப்புகள் எல்லாம் தமிழில் நகரவில்லை. தமிழ்நாட்டுப் பாடத் திட்டங்களில் தமிழ் கட்டாயம் கிடையாது. தமிழைப் படிக்காமலேயே தமிழ் நாட்டில் பட்டதாரியாகிவிட முடியும் (கருநாடகத்தில் கன்னடம் படிக்காத பப்பு வேகாது).

இந்தியத் துணைக் கண்டத்துக்குள் உள்ள ஒரு மாநிலம் தமிழ்நாடு  6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அவர்களின் மொழி இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக ஏன் இருக்கக் கூடாது? இந்தியாவில் இருப்பதால் இந்த இழப்பா என்கிற எண்ணம் எழுந்தால், அது தவறா?

மொழிவழி மாநிலம் பிறந்த நாளில் இதனை அழுத்தமாக எடுத்து வைப்போம்  இந்த எண்ணத்தைச் செயல்படுத்தவும் வீறுகொள்வோம்!

இந்நாள் சிந்தனை இதுவே!

1.11.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக